தமிழக கால்டாக்ஸி வாகன ஓட்டுனர் சங்க ஆலோசனை கூட்டம்.
தமிழக கால் டாக்ஸி மற்றும் அனைத்து வாகன ஓட்டுனர்களின் சங்கத்தின் நிறுவனத் தலைவர் ரெட்சன் அம்பிகாபதி (எக்ஸ்)எம் சி அவர்களின் வழிகாட்டுதலில், மாநில பொது செயலாளர் பி. ஆர். சாமி அவர்களின் தலைமையில் கால் டாக்ஸி ஓட்டுனர்கள் நூதன புரட்சி அறிமுக விளக்கக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது.
பின்பு ரெட்சன் அம்பிகாபதி மற்றும் பி.ஆர். சாமி இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
தமிழக கால்டாக்சி மற்றும் அனைத்து வாகன ஓட்டுநர்களின் சங்கங்கள் சார்பாக ஓலா, ஊபர் கொட்டத்தை அடக்கும் விதமாக அனைத்து தொழிற் சங்கங்களின் நிர்வாகிகளையும் அழைத்து
வருங்காலத்தில் கார்ப்பரேட் கம்பெனிகளில் அதிகாரத்தை கட்டுப்படுத்துவதற்கு என்ன வழியோ அதை சிந்தித்து செயல்படுத்த உள்ளோம் இலவச சலுகைகளை காட்டி ஓட்டுநர்களை கார்ப்பரேட் கம்பெனிகள் ஏமாற்றி அதன் மூலம் அவர்களை வளர்த்துக்கொண்டு ஓட்டுநர்களும், வாடிக்கையாளர்களையும் அடிமைப் படுத்தி விட்டது இதை மாற்றுவது தொடர்பாக அனைத்து நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினோம் என்று கூறினர்.
இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய நிர்வாகிகள்
1-தமிழ்நாடு கால் டாக்ஸி தொழிலாளர் சங்கம்-மு. பூபதி சிஐடியு- பொதுச்செயலாளர்.
2-உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம்-இ.சே. சுடர் வேந்தன் மாநிலத் தலைவர்.
3-தமிழக ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு-எஸ். சபரிநாதன் ஒருங்கிணைப்பாளர்.
4-தோழர்கள் கார் ஓட்டுநர் அமைப்புசாரா தொழிற்சங்கம்-ஜெ. ராமானுஜம் மாநிலத் தலைவர்.
5-அனைத்து ஓட்டுநர்கள் வாழ்வுரிமை தொழிற்சங்கம்-எம். ராமகிருஷ்ணன் மாநிலத் தலைவர்.
6- அக்னி சிறகுகள் ஓட்டுநர் சங்கம்-இ.வி. தரண்ராஜா மாநில பொதுச்செயலாளர்
7-உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கம்- தனசேகர் மாநில பொருளாளர்
8-அனைத்து இந்திய வாகன ஓட்டுனர் பேரவை- ஆரணி குணசேகர் நிறுவனர் தலைவர்