இந்தியாவில்முதல்முறையாககுழந்தையின்நுரையீரலைப்பயன்படுத்திபெரியவருக்கான நுரையீரல் அறுவை சிகிச்சை சாதனை
சென்னை ஜூன் 2026: ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சென்னை கிளெனீகல்ஸ் மருத்துவமனை ஆனது, இந்தியாவில் முதல்முறையாக குழந்தை நன்கொடையாளரின் நுரையீரலைப் பயன்படுத்தி – முதிர் வயதினருக்கான நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது. இதன் மூலம், தீவிரமடைந்த ‘முடக்கு வாதம் சார்ந்த நுரையீரல் நோயால்’ (RA-ILD) பாதிக்கப்பட்டிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 39 வயதுப் பெண்மணிக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
இப்பயனாளி கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த RA-ILD நோயுடன் போராடி வந்தார். முடக்கு வாதத்துடன் தொடர்புடைய இந்தத் தீவிரமான பாதிப்பு, நுரையீரலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி, சுவாசத்தை பெருமளவில் பாதித்துள்ளது. தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்தபோதிலும், அவரது உடல்நிலை ஒரு கட்டத்தில் மோசமடைந்து, நிமிடத்திற்கு 1 லிட்டர் என்றிருந்த அவரது ஆக்சிஜன் தேவை நிமிடத்திற்கு 8 லிட்டராக அதிகரித்தது. இது அவரது வாழ்க்கைத் தரத்தையும், அன்றாடப் பணிகளைச் செய்யும் திறனையும் கடுமையாகப் பாதித்தது.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண்மணி, சென்னை கிளெனீகல்ஸ் மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவின் இயக்குநர் டாக்டர் கோவினி பாலசுப்பிரமணியனை அணுகினார். இவருக்குத் துணையாக, நுரையீரல் சிகிச்சை, இன்டர்வென்ஷனல் நுரையீரல் சிகிச்சை மற்றும் தூக்க மருத்துவப் பிரிவின் மூத்த ஆலோசகர்களான டாக்டர் சிந்துரா கோகண்டி, டாக்டர் விமி வர்கீஸ் மற்றும் நுரையீரல் சிகிச்சை பிரிவின் மூத்த ஆலோசகர் டாக்டர் சுஷ்மிதா ராய்சௌத்ரி ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் செயல்பட்டனர்.
ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சென்னை கிளெனீகல்ஸ் மருத்துவமனையின் மருத்துவச் சேவைகளின் தலைவர் டாக்டர் பிஸ்வரூப் பால் கூறுகையில், “இந்த வெற்றிகரமான மாற்று அறுவை சிகிச்சை, ஒருங்கிணைந்த பன்முக மருத்துவச் சேவை மற்றும் மருத்துவ சிறப்பின் வலிமையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் மிக உயர்ந்த தரத்தை உறுதி செய்யும் அதே வேளையில், மாற்று அறுவை சிகிச்சை மருத்துவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் எங்களது அர்ப்பணிப்பை இது வெளிப்படுத்துகிறது,” என்றார்.
அறுவை சிகிச்சைக்குப் பின் அந்தப் பெண்மணியின் உடல்நிலை வியக்கத்தக்க வகையில் மிக வேகமாக முன்னேற்றமடைந்துள்ளது. அறுவை சிகிச்சை முடிந்த மறுநாளே அவரது செயற்கை சுவாசக் குழாய் தேவை அகற்றப்பட்டது; மூன்றாவது நாளில் அவர் ஆக்சிஜன் ஆதரவு ஏதுமின்றித் தானாகவே நடக்கத் தொடங்கினார்; மேலும், பன்னிரண்டாவது நாளில் அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இன்று, அவர் எவ்வித சிரமமுமின்றி இயல்பாக சுவாசிப்பதுடன், தனது அன்றாடப் பணிகளையும் தன்னிச்சையாக கவனித்து வருகிறார். இது அவரது வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ள ஒரு மகத்தான முன்னேற்றத்தைக் காட்டுகிறது. என்றார்
