சென்னை முதல் கன்னியகுமரி வரை 900 கி.மீ மாபெரும் சைக்கிள் பேரணி தமிழக காங்கிரஸ் சார்பில்
சென்னை சைதாப்பேட்டையில் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை தலைவர் மகாத்மா ஸ்ரீ நிவாசன் தலைமையில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சென்னை முதல் கன்னியகுமரி வரை 900 கி.மீ மாபெரும் சைக்கிள் பேரணி தமிழக காங்கிரஸ் சார்பில் நடைபெறுகிறது
மேலும் இந்த பேரணி மகாத்மா சீனிவாசன் தலைமையில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கொடியசைத்து துவக்கி வைத்தார் இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி மாநில பொதுச்செயலாளர் செல்வம் மத்திய மாவட்ட தலைவர் முத்தழகன் நடிகை
ஷகிலா ஆகியோர் பங்கேற்றனர்
இதில் குறிப்பாக இளைஞர்கள் பெண்கள் ஆண்கள் என மொத்தம் 56 பேர் பங்கேற்றுள்ளனர்
இப்பேரணி ஆனது என்று தொடங்கி மொத்தம் பதினோரு நாட்கள் நடைபெற்று 24தேதி குமரி காந்தி மண்டபத்தில் முடிய உள்ளது சைக்கிள்களில் வந்த அனைவரையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் அவர்களை வரவேற்க உள்ளனர்.
சைக்கிளை ஓட்டிச் சென்றவர்களுக்கு சைக்கிள்கள் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது இதைத்
தொடர்ந்து கொரோனா காலகட்டத்தில் பொது மக்கள் வேலையின்றி தவிக்கும் இந்த நேரத்தில் அத்தியாவசிய பொருட்களான பெட்ரோல் டீசல் எரிவாயு விலையை மத்திய அரசு மிகவும் உயர்த்தி வருவது கண்டிக்கத்தக்கது
பேட்டி தமிழ்நாடு மனித உரிமை துறை தலைவர் மகாத்மா சீனிவாசன்
கன்னியாகுமரி சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை 900 கிலோ மீட்டர் வந்து பேரணி நடத்த இருக்கிறோம் ராகுல் காந்தி இதனை சிறப்பாக நடத்த இதற்காக அரசுக்கு துணையாக இருக்கும் என்று தெரிவித்தார்
32 ரூபாய்க்கு விற்க வேண்டிய பெட்ரோல்-டீசல் விலையானது 102 ரூபாய்க்கு தற்போது விற்கப்பட்டு வருகிறது
பிரதமர் அவர்கள் ஜிஎஸ்டி வரியோடு சேர்த்தி42 ரூபாய்க்கு பெட்ரோல் விற்க முடியும் ஆனால் அந்த விலைக்கு மத்திய அரசு பெட்ரோலை கொடுக்க மறுக்கிறது
பத்தாயிரம் ரூபாய் மட்டும் சம்பளமாக வாங்கும் ஒரு தொழிலாளி அவரது இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுக் கொள்வது மிகவும் கடினமானது அவர்களிடமிருந்து பிரதமர் அவர்கள் மாதம்2000 ரூபாய் கொள்ளை அடிக்கிறார்..
7 ஆண்டுகளாக பிரதமர் மோடி இந்தியாவை கண்டுகொள்ளாமல் தூங்குவதும் நடிகையுடன் பேசுவதும் சொகுசு உடை அணிந்து ஊர் சுத்துவதையே வழக்கமாக வைத்து கொண்டு இருக்கிறார்..
பிரதமர் மோடி ஏழை எளிய மக்களுக்கு எட்டாமல் உள்ள தங்க விலையை போல பெட்ரோல் டீசல் விலையை ஏற்றுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்