இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரையில் பிரம்மாண்ட சாம்பிராணி மற்றும் பூஜைப் பொருட்கள் கண்காட்சி!

IMG-20261113-WA1119

இந்தியாவிலேயே முதன்முறையாக சாம்பிராணி மற்றும் பூஜைப் பொருட்கள் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்களை ஒருங்கிணைக்கும் வகையில், தமிழ்நாடு உடனடி சாம்பிராணி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பிரம்மாண்டமான TISMA EXPO 2026 கண்காட்சி மதுரையில் நவம்பர் 27, 28 மற்றும் 29 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், TiSMA EXPO 2026 கண்காட்சித் தலைவர் ஜே.கே. முத்து, TiSMAசங்கத் தலைவர் டி.எஸ். ஜீயர்பாபு, சங்கச் செயலாளர் சி. செந்தில்குமார், கண்காட்சியின் டைட்டில் ஸ்பான்சரான GT Group of Companies நிறுவனத்தின் ஜிதேந்தர் தோஷி மற்றும் சங்கப் பொருளாளர் எஸ். ராஜசௌந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உடனடி சாம்பிராணி மற்றும் பூஜைப் பொருட்கள் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் ஆகியோரை ஒரே இடத்தில் இணைத்து, புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் தேசிய அளவிலான பிரத்யேக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். மதுரை ஐடா ஸ்கட்டர் அரங்கில் நவம்பர் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சி, இந்தியாவில் சாம்பிராணி மற்றும் பூஜைப் பொருட்கள் தொழில்துறைக்கென பிரத்யேகமாக நடத்தப்படும் முதல் பிரம்மாண்டமான B2B கண்காட்சியாக அமைய உள்ளது.

தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட சாம்பிராணி மற்றும் பூஜைப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் தங்களது தயாரிப்புகளுடன் இந்தக் கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 5,000-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள், வியாபாரிகள்,மொத்த விற்பனையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் இந்தக் கண்காட்சியைப் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் தமிழ்நாட்டின் சாம்பிராணி மற்றும் பூஜைப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் தங்களது தயாரிப்புகளை நாடு முழுவதும் சந்தைப்படுத்துவதற்கும், புதிய விநியோகஸ்தர்களை அடையாளம் காண்பதற்கும், வணிகத் தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கும் வாய்ப்பு ஏற்படும்.

சாம்பிராணி மற்றும் பூஜைப் பொருட்கள் விநியோகத் தொழிலில் புதிதாக ஈடுபட விரும்புவோருக்கு இந்தக் கண்காட்சி சிறந்த வாய்ப்பாக அமையும். குறைந்த முதலீட்டில் புதிய விநியோகத் தொழிலைத் தொடங்க விரும்புவோர் உற்பத்தியாளர்களை நேரடியாகச் சந்தித்து வணிக வாய்ப்புகள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

நவம்பர் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மதுரை ஐடா ஸ்கட்டர் அரங்கில் நடைபெறவுள்ள TİSMA EXPO 2026 கண்காட்சியில் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், வியாபாரிகள், தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாகப் பங்கேற்றுப் பயனடைய வேண்டும்.
என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

About Author