டேக் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்

IMG_1516

தரமான கட்டுமானம், வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட வளர்ச்சி ஆகியவற்றிற்காக அறியப்பட்ட, வேகமாக வளர்ந்து வரும் கட்டுமான நிறுவனமாகிய டேக் டெவலப்பர்ஸ் புகழ்பெற்ற இசையமைப்பாளரும், சர்வதேச இசைக் கலைஞருமாகிய இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மானைத் தமது விளம்பரத் தூதராக அறிவித்தது.

மேஸ்ட்ரோ ஏ.ஆர். ரஹ்மான் முன்னிலையில் சுமார் 1,000 புதிய வீடுகள் கொண்ட ஐந்து குடியிருப்புத் திட்டங்கள்சென்னையில்அறிமுகப்படுத்தப்பட்டன.

இக்குடியிருப்புத் திட்டங்கள், போரூர் அருகேயுள்ள காட்டுப்பாக்கம், சென்னைபெங்களூர்தேசியநெடுஞ் சாலையில் உள்ள சுங்குவார்சத்திரம், போரூர்இராமச்சந்திராமருத்துவமனைக்கு அருகேயுள்ள குமணன்சாவடி, ஓ.எம்.ஆர்.-இல் உள்ள சோழிங்கநல்லூர் மற்றும் சிறுசேரி ஆகிய இடங்களில் கட்டப்படவுள்ளன.

டேக் நிறுவனம் ஒரு நவீன, நம்பகமான மற்றும் சர்வதேச மதிப்பு கொண்ட பிராண்டாகத் தம்மை நிலைநிறுத்திக்கொள்ள இந்த டேக் டெவலப்பர்ஸ் – ஏ.ஆர். ரஹ்மான் இணைவு பெரும் உந்து சக்தியாக இருக்கும். மேலும் டேக் நிறுவனத்தின் புதுமை, நேர்மை மற்றும் உலகத்தரம் வாய்ந்த கட்டுமானத் தரங்களுக்கான உறுதிப்பாட்டை இந்த இணைவு வலுப்படுத்தும்.

இந்த இணைவு குறித்து தனது எண்ணங்களை வெளிப்படுத்திய ஏ.ஆர். ரஹ்மான், “நம் கனவுகள் அனைத்தும் உருவாகும் இடம் வீடுதான். தென் இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாகிய டேக் டெவலப்பர்ஸ் நிறுவனத்துடன் ஒரு இனிமையான புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதயத்திலிருந்து இசையை உருவாக்குவதைப் போல, அன்புடன் அழகான வீடுகளை உருவாக்கும் குழுவை நான் டேக் நிறுவனத்தில் காண்கிறேன். ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சி பொங்கும் வகையில் வீடுகளைக் கட்டிவரும் டேக் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் விழுமியங்களை நான் மதிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

About Author