Show on front: page Page on front ID: 570 காவேரி மருத்துவமனை நடத்தும்K10K புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டம் 2026 – 4-வது பதிப்பு ஓட்டத்திற்கான ‘ரேஸ் கிட்’ வழங்கும் நிகழ்வு

காவேரி மருத்துவமனை நடத்தும்K10K புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டம் 2026 – 4-வது பதிப்பு ஓட்டத்திற்கான ‘ரேஸ் கிட்’ வழங்கும் நிகழ்வு

fac7e1be-ce54-4d61-bc35-475c71721fda

சென்னை, 31 ஜனவரி 2026 – காவேரி மருத்துவமனை சார்பில் 4-வது பதிப்பாக நடத்தப்படும் K10K புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டத்திற்கான முன்னோட்ட நிகழ்வாக இதில் பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கு ‘ரேஸ் கிட்கள்’ வழங்கப்படும் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது. புற்றுநோய் விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் அதிகரிப்பதை இலக்காகக் கொண்ட இந்த K10K ஓட்டத்தின் பிரதான நிகழ்வு பிப்ரவரி 1, 2026 அன்று நடைபெற உள்ளது. ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்கள், குடும்பங்கள் மற்றும் உடற்தகுதியைப் பராமரிப்பதில் அக்கறை கொண்ட ஆர்வலர்களை இந்த நிகழ்வு ஒன்றிணைக்கும்.

இந்த ஓட்ட நிகழ்வின் பங்கேற்பாளர்களுக்கு ரேஸ் கிட் வழங்கும் நிகழ்வை சென்னை காவேரி மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் தொடங்கி வைத்தனர். கடந்த மூன்று ஆண்டுகளில், K10K ஓட்ட நிகழ்வு சீரான மற்றும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதுவரை 12,000-க்கும் மேற்பட்ட ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்றிருப்பது பொதுமக்களிடையே இதற்கு தொடர்ந்து பெருகி வரும் ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்ற இந்நிகழ்வில் தனிநபர்கள், குடும்பங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், உடற்பயிற்சி குழுக்கள் மற்றும் குடியிருப்பு சங்கங்களின் பங்கேற்பு தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது. சென்னை மாநகரம் முழுவதும் புற்றுநோய்க்கான கல்வியை வழங்கும் ஒரு விழிப்புணர்வு இயக்கமாக இந்த ஓட்ட நிகழ்வு மக்களின் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

K10K புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டம் 2026, பல்வேறு உடற்தகுதி நிலைகளில் உள்ளவர்களும் பங்கேற்கும் வகையில் 5 கி.மீ மற்றும் 10 கி.மீ ஆகிய இரு பிரிவுகளில் நடத்தப்படுகிறது. புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல், உடல்நலத்தைப் பேணுவதற்காக விழிப்புணர்வுடன் முடிவுகளை எடுப்பது மற்றும் புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களின் தொடர்ச்சியான ஈடுபாட்டை ஊக்குவிப்பதே காவேரி மருத்துவமனை குழுமம் எடுத்து வரும் இந்த சிறப்பான முயற்சியின் நோக்கமாகும்.
விழிப்புணர்வை ஏற்படுத்த ஓடுவோம். புற்றுநோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய ஓடுவோம். ஆக்கப்பூர்வ மாற்றத்தை உருவாக்க ஓடுவோம்.

இடம்: ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மைதானம், சுவாமி சிவானந்தா சாலை, சென்னை.
கூடுதல் விவரங்களுக்கு: 044 40006000 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

About Author