சென்னை மண்டல எஸ்.பி.ஐ அலுவலகத்தில் 79வது சுதந்திர தின கொண்டாட்டம்
சென்னை, ஆகஸ்ட் – 16 , ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சென்னை மண்டல தலைமை அலுவலக வளாகத்தில் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
எஸ்.பி.ஐ மண்டல
தலைமை பொதுமேலாளர் விவேகானந்த் சோபே தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நமது நாட்டின் ஒற்றுமையையும், சுதந்திரத்தினையும் குறிக்கும் வகையில் மூவர்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
விழாவில் எஸ்.பி.ஐ-யின் மூத்த அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
தலைமை பொதுமேலாளர் சுதந்திர தின உரையில், நாட்டின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் எஸ்.பி.ஐ – ன் முக்கிய பங்கு மற்றும் அதன் அர்ப்பணிப்பையும் எடுத்துரைத்தார்.
மேலும், அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு பணியாளர்களான தேசத்திற்கு சேவை செய்து பெருமை சேர்த்த ஆயுதப்படைகளைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர்களுக்கு தன்னலமற்ற பணிக்காக பாராட்டு விழா நடத்தப்பட்டது.
