சென்னையில் நடைபெற்ற Casagrand நிறுவனத்தின் ‘Battle of Brains’ Season 2 பள்ளிகளுக்கு இடையிலான வினாடி வினா

IMG-20261117-WA0987

Casagrand நிறுவனம், NEXUS நிறுவனத்துடன் இணைந்து நடத்திய இந்தப் போட்டியில், சென்னையின் 259-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 750-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். மேலும், 350-க்கும் மேற்பட்ட பெற்றோர்களும் ஆசிரியர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பல கட்டங்களாக நடைபெற்ற தகுதிச் சுற்றுகளுக்குப் பிறகு, சிறப்பாகச் செயல்பட்ட ஆறு அணிகள் இறுதிப்போட்டிக்குத் தேர்வாகின. சென்னை ஐஐடி மெட்ராஸ் ரிசர்ச் பார்க் வளாகத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், PSBB கே.கே. நகர் பள்ளி மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினர். பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கோப்பைகளுடன் உயர்தர மின்னணு சாதனங்களும் வழங்கப்பட்டன. 

இறுதிப்போட்டி நிகழ்வில் காசாகிராண்டு நிறுவனத்தின் தலைமை மார்க்ரகட்டிங் அதிகாரி Diptakirti Chaudhuri மற்றும் நெக்ஸஸ் நிறுவனத்தின் நிறுவனர் வெங்கடேஷ் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இளம் தலைமுறையினரிடையே அறிவாற்றல், ஆர்வம், பகுத்தறியும் திறன் மற்றும் கற்றல் மீதான ஈடுபாட்டை வளர்ப்பதே இந்தப் போட்டியின் முக்கிய நோக்கம் என காசாகிராண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாவது ஆண்டாகவும் இந்தப் போட்டி சிறப்பாக நிறைவடைந்துள்ளது

About Author