சென்னைக்கு வந்துவிட்டது பாரடைஸின் கெபாப் திருவிழா!

IMG_8920

சென்னை, 13 ஆகஸ்ட் 2025: ஹைதராபாத், பெங்களூரை அடுத்து சென்னையிலும் பாரடைஸ் ஃபுட் கோர்ட்டில் கெபாப் திருவிழா (Kebab Fest) நடக்க இருக்கிறது. மாபெரும் சங்கிலித்தொடர் உணவக நிறுவனமான பாரடைஸ் ஃபுட் கோர்ட், கடந்த எழுபது ஆண்டுகளாக அசல் ஹைதராபாத் பிரியாணியை உயர்தர சுவையில் வழங்கிவருகிறது. தற்போதைய கெபாப் திருவிழா, ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கி, சென்னை மக்களுக்கு நாட்டின் அனைத்துப் பகுதி கெபாப் உணவுகளையும் ஒரே இடத்தில் சுவைக்கும் வாய்ப்பை பாரடைஸ் வழங்குகிறது. இச்சுவை மிகுந்த கெபாப் ரகங்களை சென்னையில் உள்ள பாரடைஸ் உணவகக் கிளைகளில் அமர்ந்தும் உண்ணலாம், பார்சலாக வாங்கிச் செல்லலாம் அல்லது ஆன்லைனில் ஆர்டர் செய்தும் வரவழைக்கலாம்.
ஹைதராபாத்-ன் பெருமைமிகு அசல் உணவுகளை வழங்கிவரும் பாரடைஸ், நாட்டின் மிக முக்கிய மாநகரங்களில் ஒன்றான சென்னைக்கு இந்த தனித்துவமான கெபாப் உணவுத்திருவிழாவை அறிமுகம் செய்வதில் பெருமையடைகிறது. அதேவேளையில், அசல் சுவை, மணத்தை உறுதி செய்வதுடன், சுகாதாரமான சூழலில், உயர் பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன.
ஜம்மு காஷ்மீரைப் பூர்வீகமாகக் கொண்ட ஜஃப்ரானி கால்மி கெபாப் முதல் (Zafrani Kalmi Kebab) மத்தியப்பிரதேசத்தின் ரெஷ்மி மலாய் கெபாப், சேலம் சிக்கன் டிக்கா கெபாப் வரை, நீங்கள் எல்லா வகையான கெபாப் ரகங்களையும் கெபாப் திருவிழாவில் சுவைக்கலாம். இத்தோடு இப்பட்டியல் முடிந்துவிடவில்லை. உத்தரப்பிரதேசத்தின் சிக்கன் டிக்கா கெபாப், நீலகிரி சிக்கன் டிக்கா கெபாப் என்று பல வகை உணவுகளும் மெனுவில் உண்டு. அதேபோல சைவப்பிரியர்களுக்காக தேச்சா பனீர் டிக்கா கபாப் (மஹாராஷ்டிரா), பத்தானியா பநீர் டிக்கா கெபாப் ஆகியவையும் இங்கு உண்டு.
பாரடைஸ் ஃபுட் கோர்ட் (பி)லிட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் திரு. ராபிந்தர் சிங் பேசும்போது, “சென்னையில் கெபாப் திருவிழாவை நடத்துவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இது ஒரு தொடக்கம் மட்டுமே. எங்கள் கிளைகளை மேலும் விரிவுபடுத்தவும் மெனுவில் நிறைய புதிய உணவு வகைகளைச் சேர்க்கவும் திட்டமிட்டிருக்கிறோம். எங்களது வாடிக்கையாளர்களுக்கு தரமான, ஈடு இணையற்ற விருந்தோம்பல் அனுபவத்தைத் தருவதே எங்களது நோக்கமாகும்” என்றார்.

“எங்களது எல்லா உணவு தயாரிப்பிலும் என்னென்ன பொருட்களைச் சேர்க்க வேண்டும் என்பதில் நாங்கள் வெகு கவனமாக இருக்கிறோம்.
அசலான சுவையுடன் சிறப்பான பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன” என்கிறார் பாரடைஸ் ஃபுட் கோர்ட் (பி) லிட் நிறுவனத்தின் உணவு தயாரிப்பு பிரிவின் துணைத்தலைவர் திரு.ஸ்வதந்திர கவுதம்.

ஒரு ஆண்டில் அதிக பிரியாணிகள் பரிமாறியதற்காக, இந்த உணவகச் சங்கிலி லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. 2017-ஆம் ஆண்டு, பாரடைஸ் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பிரியாணி பரிமாறியுள்ளது. மேலும் அந்த எண்ணிக்கை 90 லட்சத்தையும் கடந்தது. ஆசிய உணவு மாநாட்டில், ‘தலைசிறந்த பிரியாணி பரிமாறும் உணவகம்’ என்ற விருதையும் பாரடைஸ் பெற்றது. 2018-ஆம் ஆண்டில் இந்திய உணவு மன்றத்தில் ‘கோல்டன் ஸ்பூன்’ விருதையும் பெற்றது. அடுத்தடுத்த ஆண்டுகள் வெற்றிப் பயணத்துடன், தெலங்கானா மாநில ஹோட்டல் சங்கங்கள், ஜிஹெச்எம்சி(GHMC), டைம்ஸ்-ன் உணவு விருது, பிரைட் ஆஃப் தெலுங்கானா விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது என்று பல பாராட்டுகளையும் கௌரவத்தையும் பாரடைஸ் பெற்றிருக்கிறது.

பாரடைஸ் குறித்து…
1953-ஆம் ஆண்டு, செகந்தராபாத்-ல் உள்ள ‘பாரடைஸ்’ என்ற திரையரங்குக்குள் ஒரு சிறிய உணவகம் & கஃபே தொடங்கப்பட்டது. அந்தத் திரையரங்கம் நிரந்தரமாக மூடப்பட்ட பிறகும், அந்தக் கஃபே தொடர்ந்து செயல்பட்டது. 1978 முதல் 1996 வரை, அந்த உணவகம் பெரிய அளவில் மறுசீரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு நவீனமயமாக்கப்பட்டது. புதிய சமூகப் போக்குகளுக்கும், மாறிவரும் உணவுப் பழக்கங்களுக்கும் ஏற்ப இந்த மாற்றங்கள் செய்யப்பட்டன. இன்று, ‘பாரடைஸ்’ இந்தியா முழுவதும் தனது கிளைகளைப் பல இடங்களிலும் கொண்டுள்ளது. நாங்கள் அசல் ஹைதராபாத் பிரியாணியின் முன்னோடிகளாக அறியப்படுகிறோம். இந்த ஹைதராபாத் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு செல்ல நாங்கள் திட்டமிட்டுள்ளோம். என்றார்

About Author