தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் செங்கற்பட்டு கிழக்கு மாவட்டம் சார்பாக கலந்தாய்வு கூட்டம்

b3758240-1d47-45a0-a75e-75ff497c7892

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் செங்கற்பட்டு கிழக்கு மாவட்டம் சார்பாக பம்மல் சாலையில் அமைந்துள்ள எஸ்.எஸ்.மஹாலில் கூட்டு கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது.

இதில் பொதுச்செயலாளர் கொளத்தூர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

இக்கலந்தாய்வு கூட்டத்தின் முடிவில் பொதுச் செயலாளர் கொளத்தூர் சரவணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

கடந்த 20 – 25 ஆண்டுகளாக
மின் வாரிய பணிகளில் ஒப்பந்த தொழிலாளர்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பெறாமலும், ஏன் தினக்கூலிக்கு கூட தகுதியற்ற நிலையில் எந்த பயனும் பெறாமல் பணி செய்து வருகிறார்கள்.

மின்சார வாரியத்தில் அனைத்து அலுவலகத்திலும், ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். ஆனால் அதிகாரிகளோ அதை மறுக்கிறார்கள். அலுவலகப் பணி மற்றும் களப்பணிகளில் ஒப்பந்த தொழிலாளர்கள் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது. அப்படியிருக்க எங்களை உதாசீனப்படுத்துவது நியாயமற்றது என்றும்
தமிழக முதல்வர் கடந்த தேர்தல் வாக்குறுதியில் கூறிய படி153 ஐ அமல்படுத்தி 2007-ல் பட்டியலில் விடுபட்டவர்கள், நீர் மின்நிலையங்கள், அனல் மின் நிலையங்கள் ஆகிய இடங்களில் பணியில் இருக்கும் ஒப்பந்த தொழிலாளர்கள்,
கே.2 மற்றும் பகுதி நேர ஒப்பந்த தொழிலாளார் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர் . இவர்கள் அனைவரின் அனைத்து கோரிக்கைகளை முதல்வர் கவனித்து நிறைவேற்ற வேண்டும் என்றும்

எண்ணூர், தூத்துக்குடி, மேட்டூர் மின்உற்பத்தியங்களில் பணி புரியும் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளார்கள் சார்பாக நடைபெற்ற போராட்டத்தின் போது மின்வாரியமே அடையாள அட்டை வழங்கும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பின்னர் தற்போது ஒப்பந்ததாரர்களின் நிறுவன அடையான அட்டையை வழங்கும் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும் அனுபவம் பெற்ற ஒப்பந்த தொழிலாளார்களுக்கு பணி வழங்குவதை தவிர்த்து விட்டு தமிழ்நாடு தேர்வாணயம் மற்றும் ஐ.டி ஐ – ல் தேர்வானவர்களை பணியில் அமர்த்துவது ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.
மேற்கண்ட அனைத்து பிரச்சினைக்கும் உடனடி ஒரே தீர்வு
அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் 153 வது வாக்குறுதியை நிறைவேற்ற வதுதான்.

ஆகவே எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஆகஸ்ட் -18 அன்று தமிழ்நாடு மின்வாரியம் அலுவலகம் அருகில் ஆர்பாட்டம் நடந்த உள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநில பொருளாளர் செங்கை சுரேஷ், செங்கை கிழக்கு மாவட்டச் செயலாளார் டி.தர்மராஜ், மாவட்டத் தலைவர் டி.செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் எம்.ராஜேஷ், மாவட்ட துணைத் தலைவர்கள் கே.ரமேஷ், டி.சதீஷ்குமார், மாவட்டத் துணைச் செயலாளார் பி.ஜோதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்எஸ்.டி .கார்த்திக்ராம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.சுஜித், எம்.சேகர், மேற்கு மாவட்டத் தலைவர் எஸ்.சிகாமணி, மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

About Author