மேடவாக்கத்தைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் ஒருங்கிணைந்து கொண்டாடிய சர்வதேச யோகா தினம்
சென்னை, ஜூன் 2025: உலகெங்கும் இன்று அனுசரிக்கப்படும் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாட மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த பல்வேறு குடியிருப்பு வளாகங்களில் வசிக்கும் 500-க்கும் அதிகமான நபர்கள் நவீன்ஸ் ஸ்டார்வுட் டவர்ஸ்-ல் ஒன்று கூடினர். மேடவாக்கத்தின் பிரபல குடியிருப்பு வளாகமான நவீன்ஸ் ஸ்டார்வுட் டவர்ஸ்-ல் நடைபெற்ற இந்நிகழ்வில் யோகா மற்றும் ஜூம்பா நடன அமர்வுகளுடன் கலகலப்பும், மகிழ்ச்சியும் அளிக்கும் கேளிக்கை செயல்பாடுகளும் அதிகளவில் இடம் பெற்றன. யோகா மற்றும் உடற்பயிற்சி செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற சிறப்பான நிகழ்வில் நவீன்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், தலைவருமான டாக்டர். R. குமார், செயலாக்க இயக்குநரான திருமதி. P. பவானி மற்றும் இயக்குநர் மிஸ். க்ஷுர் வசுதா குமார் ஆகியோரின் உற்சாகமான பங்கேற்பு இந்நிகழ்விற்கு மேலும் சிறப்பு சேர்த்தது.
உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகா மற்றும் விளையாட்டுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய டாக்டர். R குமார், இன்றைய காலகட்டங்களில் முழுமையான நலவாழ்வை ஊக்குவிக்கும் குறிக்கோளோடு குடியிருப்பு சமூகங்கள்/ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இத்தகைய செயல்பாடுகளுக்கு அதிக இடவசதியை அளிப்பதற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன என்று சுட்டிக் காட்டினார். தங்களது உடல்நலம் மற்றும் உடற்தகுதிக்கு முன்னுரிமை அளிக்குமாறும், ஆரோக்கியமான இலக்குகளை நிர்வகித்து அவற்றை அடைவதற்காக விடாமுயற்சியோடு செயலாற்றுமாறும் இந்நிகழ்வில் பற்கேற்றவர்களை அவர் வலியுறுத்திக் கேட்டு கொண்டார்.
நவீன்ஸ் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திய சர்வதேச யோகா கொண்டாட்டங்கள் நிகழ்வில், ஊராட்சி மன்றத் தலைவர் திரு. V. ஜெயச்சந்திரன், மற்றும் சமூக ஊடக தம்பதியரான அதிதி, அரவிந்த் ஆகியோரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
