ஜெஇஇ மெயின் 2026 தேர்வில் சென்னையைச் சேர்ந்த ஆகாஷ் இன்ஸ்டிடூட் மாணவர் அஜய் சாதனை

IMG_1813

99.99 சதவீதம் மாணவர்களைவிட அதிக மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம்; இயற்பியல், கணிதத்தில் 100 பெர்சன்டைல் பெற்று அசத்தல்

சென்னை, பிப்ரவரி 2026: ஜெஇஇ மெயின் 2026 தேர்வில் சென்னையைச் சேர்ந்த ஆகாஷ் இன்ஸ்டிடூட் மாணவர் அஜய் 99.99 சதவீதம் மாணவர்களைவிட அதிக மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் இயற்பியல், கணிதப் பாடத்தில் 100 பெர்சன்டைல் பெற்று தமிழகத்திற்கும் ஆகாஷ் எஜுகேஷனல் கல்வி நிறுவனத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

ஆகாஷ் எஜுகேஷனல் நிறுவன மாணவர்கள், ஜெஇஇ மெயின் 2026 (அமர்வு 1) தேர்வில் மீண்டும் தங்களது சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளனர். இது அந்தந்த மாநிலங்களின் கல்வித் திட்டத்தின் தொடர் வெற்றிக்கு சான்றாக அமைந்துள்ளது.

தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முடிவுகளின்படி, சென்னையின் அடையாறு கிளையைச் சேர்ந்த ஆகாஷ் மாணவர் அஜய், மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

குறிப்பாக, அஜய் இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய இரண்டு பாடங்களிலும் 100 பெர்சன்டைல் மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக அவர் 99.99 பெர்சன்டைல் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மாணவர்களின் இந்தச் சாதனைகள் குறித்து ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை கல்வி மற்றும் வணிக அதிகாரி தீரஜ் குமார் மிஸ்ரா கூறுகையில், சென்னை மாணவர்களின் இந்த சாதனை, கல்வியின் மீது அவர்களுக்கு இருக்கும் ஈடுபாட்டிற்கும், ஆகாஷ் கல்வி முறையின் வலிமைக்கும் ஒரு சிறந்த சான்றாக உள்ளது. அவர்களின் கடின உழைப்பைக் கண்டு நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம், மேலும் அவர்களின் சாதனைகளுக்கு எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் எதிர்கால முயற்சிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறோம் என்று தெரிவித்தார்.

சுய ஒழுக்கம், சீரான பயிற்சி, கடுமையான உழைப்பு, சரியான நேரத்தில் வழிகாட்டுதல் மற்றும் வழக்கமான தேர்வுகள் ஆகியவை வெற்றிக்கு உதவியதாக பல மாணவர்கள் கருத்துகளை தெரிவித்தனர். ஆகாஷ் நிறுவனத்தின் முறையான பாடத்திட்டம், தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மற்றும் மாதிரித் தேர்வுகளை எழுதும் வாய்ப்புகள் ஆகியவற்றின் மூலம், தங்களால் படிப்பில் கவனம் செலுத்த முடிந்தது என்றும், பலவீனங்களை முன்கூட்டியே கண்டறிந்து படிப்படியாக அதை குறைத்து எங்கள் செயல் திறனை அதிகரிக்க முடிந்ததாகவும் அவர்கள் கூறினர்.

ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும் ஜெஇஇ மெயின் தேர்வு, மாணவர்கள் தங்கள் முந்தைய தேர்வு முடிவுகளை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பளிக்கிறது. மேலும், இத்தேர்வின் மூலம் என்ஐடி, ஐஐஐடி மற்றும் அரசு உதவி பெறும் பிற நிறுவனங்களில் சேரவும், ஐஐடி சேர்க்கைக்கான ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வை எழுத தகுதி பெறவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author