40 தொகுதிக்கும் வேட்பாளர்களை அறிவித்த அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகம்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் தேதியை எப்ப வேண்டுமானாலும் அறிவியுங்கள்
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதற்காக தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் நாடாளுமன்ற தேர்தல் தேதியே இதுவரை அறிவிக்கப்படாத நிலையில் தமிழகத்தில் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகம் அறிவித்துள்ளது வளசரவாக்கத்தில் நடந்த வேட்பாளர் அறிவிப்பு கூட்டத்தில் அதன் மாநில பொதுச்செயலாளர் முத்துராமன் சிங்கபெருமாள் தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகத்தின் சார்பில் 40 தொகுதிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்தார். தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இந்த கட்சி அறிவித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது