அன்னை வேளாங்கண்ணி மாதா திருத்தளத்தில் 29.ஆம் தேதிகொடியேற்றத்துடன்திருவிழா

சென்னை பெசன் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா திருத்தளத்தில் 29.ஆம் தேதி
கொடியேற்றத்துடன்திருவிழா தொடங்கியதுஇந்த திருவிழா
8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாத இறுதி நாளில் நாகை மாவட்டத்தில் இருக்கக்கூடிய அன்னை வேளாங்கண்ணி மாதா திருக்கோயில் கொடியேற்ற நிகழ்ச்சி தொடங்கும். இதேப்போல் தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு தேவாலயங்களில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறும். இந்நிலையில் தலைநகர் சென்னையில் பெசன்ட்நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி தொடங்கியது.
சென்னை மயிலை மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, மாதா கொடியை ஏற்றிவைத்து விழாவை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, 10 நாட்கள் மாலை 5.30 மணிக்கு ஜெபம், சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனையை நடைபெற உள்ளது. இந்த நகழ்வில் பங்கேற்க காலை முதலே சென்னை மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகள் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்
சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா கோவில் முன்பு குவிந்துள்ளனர்.

அதைப்போல்
செப்.7-ம் தேதி வியாழக்கிழமை ஆடம்பர தேர் பவனி நடைபெற உள்ளது. இதை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தொடங்கி வைத்து, சிறப்பு வழிபாட்டையும் நடத்துகிறார். செப்.8-ம் தேதி மாதாவின் பிறப்பு பெருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 5.30மணி அளவில் மாதாவுக்கு முடிசூட்டு விழாவும், கொடியிறக்க நிகழ்வும் நடைபெற உள்ளது.

உலக அமைதிக்காகவும், சமத்துவம், சகோதரத்துவத்தை நிலைநாட்டவும், சமய, சமூக நல்லிணக்கத்தை பறைசாற்றவும் இந்த விழாவில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட உள்ளது.

இதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதிக அளவில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர். குடிநீர் மற்றும் கழிவறை என்று அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

About Author