1500 கண் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் இந்தியாவின் மிகப்பெரிய விழித்திரை கருத்தரங்கு: ரெட்டிகான் 2024

சென்னை: ஏப்ரல் 07, 2024: டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் விழித்திரை துறையால் நடத்தப்படும் இந்தியாவின் மிகப்பெரிய வருடாந்திர கருத்தரங்குகளுள் ஒன்றாக புகழ்பெற்றிருக்கும் ரெட்டிகான் 2024 இன்று நடைபெற்றது. 14-வது பதிப்பாக நடைபெற்ற இந்நிகழ்வு, இந்தியாவில் பார்வையின்மைக்கு ஒரு முக்கியமான காரணமாக இருக்கும் விழித்திரை கோளாறுகளை சரிசெய்ய மிக நவீன உத்திகள், தொழில்நுட்பங்கள் மற்றும் சிகிச்சை முறையியல்கள் குறித்து விவாதித்தது மற்றும் சிறப்பான தகவல் பரிமாற்றத்திற்கு வழிவகுத்தது. மிக ஆவலோடு ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வான இக்கருத்தரங்கு. இந்தியாவிலிருந்தும் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் விழித்திரை சிறப்பு நிபுணர்கள் மற்றும் கண் மருத்துவர்கள் உட்பட, 1500 நபர்களின் பங்கேற்பை இந்த ஆண்டு பெற்றிருக்கிறது.

மொரீஷியஸ் குடியரசின் கெளரவத் தூதர் மாண்புமிகு திரு.மலையப்பன் நாகலிங்கம் மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் விட்ரியோ – ரெட்டினல் அறுவைசிகிச்சை நிபுணர் & தலைமை வணிக அதிகாரி டாக்டர். அஸார் அகர்வால் – ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இயக்குநர் டாக்டர். ஜே.சங்குமணி இக்கருத்தரங்கு நிகழ்வை தொடங்கி வைத்தார்.

டெல்லியில் உள்ள பார்வைக்கான மையத்தின் உள்ள விட்ரியோ-ரெட்டினா சேவைகளின் இயக்குநரும், அகில இந்திய கண் மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் லலித் வர்மா இக்கருத்தரங்கில் சிறப்புரை வழங்கினார். “இந்தியாவில் விழித்திரை அறுவை சிகிச்சையில் முன்னோடி” என அழைக்கப்படும் பேராசிரியர் டாக்டர் எஸ்.நடராஜன், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் பிராந்திய தலைவர் – மருத்துவ சேவைகள், சென்னை & மருத்துவ இயக்குநர் மற்றும் தலைவர்-விட்ரியோ-ரெட்டினல் அறுவை சிகிச்சைதுறை டாக்டர். சௌந்தரி எஸ். மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் முதுநிலை சிறப்பு நிபுணர் டாக்டர் பர்வீன் சென் ஆகியோர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றியவர்களுடன் குறிப்பிடத்தக்கவர்கள்.

About Author