வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மீனவ படகுகளை பார்வையிட்டார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளான
அன்னை சத்தியா நகர் வடபழனி, எழும்பூர், புதுப்பேட்டை, துறைமுகம், கொருக்குப்பேட்டை பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.அதன் பின் காசிமேடு தொகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மீனவ படகுகளை பார்வையிட்டார்.
” 2015ல் அதிக பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் எடுக்கப்பட்ட நடவடிகையினால் தான் தண்ணீர் தற்போது வெளியேற தொடங்கியுள்ளது.
மேலும் தானும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் தனித்தனியாக நிவாரணம் வழங்குவது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள கேள்விக்கு, எங்களுக்குள் எந்த விதமான பாகுபாடும் இல்லை என்றும் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை தனித்தனியாக வழங்கி வருகிறோம்.
உங்களது பார்வையில் தான் தவறு உள்ளது என்று கூறினார்..
அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதலமைச்சர் கேள்விக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் பதிலளிக்க மறுப்பு..
தொடர்ந்து பேசிய அவர் கன மழை, அதிக காற்று காரணமாக மீனவர்கள் படகுகள் சேதமடைந்துள்ளது. பொதுமக்கள் பெரும் துயரத்தை அடைந்துள்ளார்கள், அரசு இதில் தனி கவனம் செலுத்தி அவர்களுக்கான இழப்பீடை தர வேண்டும் என்பது தான் அதிமுக கோரிக்கை கோரிக்கை என்று தெரிவித்தார்… .