மணிப்பூர் விவகாரம் :- மெழுகுவர்த்தி ஏந்தி தேவாலயம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய கிறிஸ்தவர்கள்

சென்னை சாந்தோம் நெடுஞ்சாலை சிஎஸ்ஐ ஆலயத்தின் அருகே மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் கற்பழிக்கபட்டு கொலைசெய்யபட்டதைகண்டித்தும்,கிறிஸ்துவர்களின் ஆலயங்கள் எரிக்கபட்டதை கண்டித்தும்,கண்டனஆர்ப்பாட்டம்மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றதுசிஎஸ்ஐ தூயதோமா தமிழ் ஆலயத்தின் பேராயர் சைனஸ் ஞானதாஸ் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மைதுறைமாநிலதுணைத் தலைவர் ஸ்டீபன்தலைமையில்நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என நூற்றுக்கும்மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
ஞாயிற்றுக்கிழமைதினமானகிறிஸ்தவர் கள்தேவாலயங்களில்சிறப்புபிரார்த்தனையில் ஈடுபட்ட பிறகு இந்த போராட்டத்தை மேற்கொண்டனர் 
பின்னர் செய்தியாளர்களைசந்தித்த
சிஎஸ்ஐ தூய தோமா தமிழ் ஆலயத்தின் 
பேராயர் சைனஸ் ஞானதாஸ்மணிப்பூர் நடந்து கொண்டிருக்கின்ற சம்பவங்களை பார்க்கின்றபொழுதுஎங்களால்உண்மை யிலேயே பொறுத்துக் கொள்ளாத நிலையிலே மிகவும் வேதனை அளிக்கிறது அங்கே ஆலயங்கள் இடிக்கப்படுகிறது ஆலய தொழுகைகள் மறுக்கப்பட்டுள்ளது அதை எதிர்த்து கேள்வி கேட்ட பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள் அரசுஅதிகாரிகள் கண்டுகொள்ளாமல்இருப்பதைகேள்விப் படுகிறோம் பிரதமர் மற்றும் அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம் இது நடைபெறாத பட்சத்தில் இதைவிட கூடுகை பெருமளவில் செய்யப்பட்டு கண்டனங்களைதெரிவித்துக் கொள்ளும் சூழல் ஆக இடம் கொடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம் என்றார்..இந்நிகழ்ச்சியில் செயலாளர் ஜெபராஜ் கோவில் பிள்ளை பொருளாளர் சாமிவேல் சாமி கண்ணு குழுவின் உறுப்பினர்கள் பிரதாப் சிங், தேவநேசன், கிறிஸ்டோபர், போஜஸ் பாண்டியன்
லில்லியன் சைமன் பானு ஸ்டீபன் , மோசஸ் மற்றும் தேவாலயத்தைச் சார்ந்த  300 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

About Author