சென்னையில் இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டம்
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில பொதுக்குழு திருவல்லிக்கேணியில் வைத்து நடைபெற்றது. அதில் தமிழக சிறையில் ஆயுள் கைதியாக இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும், குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைபடுத்த மாட்டோம் என்றும், ராஜீவ் காந்தி வழக்கில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்வோம் என்ற தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கும் கட்சிக்கு ஆதரவு அளிப்போம் என்று அப்துல் ரஹிம் கூறினார். இப்பொதுக்குழுவில் மாநில துணை தலைவர்கள் இம்ரான், சுலைமான் சேட்,தென் மண்டல அமைப்பு செயலாளர் முள்ளான்.செய்யது அலி, மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.