கலைவாணர் அரங்கில் பத்திரப்பதிவு கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்ப்பு கூட்டம்

கலைவாணர் அரங்கில் பத்திரப்பதிவு கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்ப்பு கூட்டம் பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

சென்னை கலைவாணர் அரங்கில் மாண்புமிகு பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் .மூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட கூடிய சங்க நிர்வாகிகள் ரியல் எஸ்டேட் கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்புபின் நிறுவனத் தலைவர் ஆ.ஹென்றி அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.
அங்கீகாரமற்ற மனைகளை போதிய விழிப்புணர்வு இல்லாமல் பொதுமக்கள் முதலீடு செய்துள்ளனர்.
இவர்கள் விற்பனை செய்து அவசர தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மறுகாயம் செய்வதற்கு தடை ஏதும் இன்றி பதிவு செய்யும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்றும்
பதிவுத் துறை மென்பொருள் ஸ்டார் 2 .0 இணைய வழி அப்டேட்டில் போலியான நபர்களால் தயாரிக்கப்படும் ஆவணத்தினால் ஏற்படும் இடர்பாடுகளை களையும் பொருட்டும் ஆவண எழுத்தர், வழக்கறிஞர்களின் கைரேகையை பதிவு செய்யும் வகையில் பயோமெட்ரிக் முறையினை ஸ்டார் 3 .0 மென்பொருள் வாயிலாக அறிமுகப்படுத்தினால் போலி ஆவணங்கள் தடுத்து நிறுத்தப்படும்
மேலும்
கடலோர பாதுகாப்பு மண்டலம் மலைகள் பாதுகாப்பு அதிகார குழுமம், தொல்லியல் துறை, நினைவுச் சின்னங்கள், விலங்குகள் பறவைகள் சரணாலயங்கள் , யானை வழித்தடங்கள், அணுமின் நிலையம், மற்றும் அனல் மின் நிலையம் அருகில் உள்ள குளங்கள், ஏரிகள், குட்டைகள், ஆறுகள், நீர்நிலைகள் , ரயில் பாதை, சுடுகாடு, இடுகாடு மற்றும் கல் குவாரிகள் போன்ற பகுதிகளுக்கு அருகில் குறிப்பிட்ட சுற்றளவு இருக்கும் மனை பிரிவு அனுமதி பெற தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இப்படிப்பட்ட பகுதிகளில் இருக்கின்ற நிலங்களை சென்ட் கணக்கில் பதிவு செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.மேலும் 70வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் பத்திரப்பதிவின் போது வரிசையில் காத்திராமல் அவர்கள் அமர நாற்காலி மற்றும் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் போன்ற 124 கோரிக்கைகளை முன்வைத்து பேசினார். பத்திரபதிவு கட்டண உயர்வை பற்றி கருத்து கேட்பு கூட்டம் நடப்பதும் இந்த கூட்டம் பத்திரபதிவு அமைச்சர் தலைமையில் நடைப்பெற்றதும் இந்த கூட்டத்தில் தலைவர்கள் செயலாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டதும் இதுவே முதல் முறை என்றும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாக இதை கருதுவதாகவும் இவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டனர்.

About Author