இந்தியன் வங்கியின் நிகர லாபம் 41 சதவீதம் அதிகரித்துள்ளது என இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை ஒப்பிடும்போது இந்தியன் வங்கியின் நிகர லாபம் 41 சதவீதம் அதிகரித்துள்ளது என இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாக இயக்குனர் எஸ் எல் ஜெயின் தெரிவித்தார்
இந்தியன் வங்கியின் UPI மற்றும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் 33 % – ல் இருந்து 85% உயர்ந்துள்ளது இந்தியன் வங்கி
சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கியின் தலைமை அலுவலகத்தில் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டுக்கான வரவு செலவு அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாக இயக்குனர் எஸ் எல் ஜெயின் பங்கேற்று இந்த அறிக்கையை வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், கடந்தாண்டு ஜூன் மாதத்தை ஒப்பிடும்போது இந்தியன் வங்கியின் நிகர லாபம் 41 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
அதேபோல் கடந்த ஆண்டு (ஜூன் 2022) 1,213 கோடியாக இருந்த இந்தியன் வங்கியின் நிகர லாபம் இந்த நிதி ஆண்டில், அதாவது ஜூன் 2023 முடிவில் 1,709 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் இது கடந்தாண்டை ஒப்பிடும்போது 41 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல் ஜூன் மாதம் 2022ல் 10,09,454 கோடியாக இருந்த இந்தியன் வங்கியின் மொத்த வர்த்தக மதிப்பு ஜூன் மாதம் 2023 அதிகரித்து 11,00,943 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் மொபைல் பேங்கிங் உபயோகிக்கும் பயனாளர்களின் எண்ணிக்கை 36 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், UPI மற்றும் ஆன்லைன் பண வர்த்தனை பயனாளர்கள் 33 சதவீதத்திலிருந்து 85 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றார்.
59 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் கணக்கு உள்ளன, ஒவ்வொரு குழுவுக்கும் 20 லட்சம் வரை கடன் வழங்குகிறோம். தங்க நகை கடனில் நாளொன்றுக்கு 200 கோடி வணிகம் நடைபெறுகிறது. 55 சதவீத வங்கி சார்ந்த வணிகம் டிஜிட்டல் மையம் ஆகிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்