மருத்துவ மின்னணுவியல் பொறியியலில் புத்தாக்க செயல்பாட்டுக்காக சிம்ஸ் மருத்துவமனையோடு எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல்  கல்லூரி 

0
045B54A0-54A0-4BA4-9BCF-AD7C33FADE6C

இந்திய மருத்துவ சூழலமைப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு முயற்சியாக எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி (SRM VEC), சென்னை மாநகரின் வடபழனியில் அமைந்துள்ள சிம்ஸ்மருத்துவமனையுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கிறது. மருத்துவ மின்னணுவியல், பொறியியல் துறை மாணவர்களுக்கு மருத்துவமனையில் நேரடி பயிற்சிக்கான வாய்ப்பை இது வழங்கும். புத்தாக்கத்தையும் ஆராய்ச்சியை முதன்மையாகக் கொண்ட கற்றல் செயல்பாட்டையும் வளர்ப்பதை இக்கூட்டாண்மை தனது இலக்காகக் கொண்டிருக்கும். மருத்துவ பிரச்சினைகளுக்கு சிரமமின்றி தீர்வுகாண்பதில் வழிகாட்டலை வழங்க இத்துறையைச் சேர்ந்த மாணவர்களை திறனுள்ளவர்களாகஇக்கூட்டாண்மை ஏதுவாக்கும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ் வழக்கமான பயிற்சி அமர்வுகள் வழியாகவும் மற்றும் இன்டென்சிப் வழியாகவும் மருத்துவ சாதனங்களை கையாள்வதில் நேரடி கற்றல் அனுபவத்தை சிம்ஸ் மருத்துவமனை வழங்கும். 

 மருத்துவ மின்னணுவியல் பொறியியல் என்பது, இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து சிறப்பு கல்விப்பிரிவுகளுள் ஒன்றாகும். பொறியியல் மற்றும் மருத்துவம் ஆகிய பிரிவுகளில் உள்ள பலங்களை ஒருங்கிணைப்பதன் வழியாக இவை இரண்டுக்கும் இடையில் வளர்ந்துவரும் இடைவெளியை நிரப்புவதே இக்கல்விப்பிரிவின் நோக்கமாக இருக்கிறது. இந்தியாவில் மேம்பட்ட உடல்நல பராமரிப்பு சிகிச்சைக்கான சேவையை பூர்த்தி செய்கிற மருத்துவ மின்னணுவியல், பொறியியல் தொழில்முறை பணியாளர்களை உள்ளடக்கிய திறமைசாலிகள் குழுமத்தை இக்கூட்டாண்மையின் மூலம் உருவாக்க எஸ்ஆர்எம் VEC திட்டமிட்டிருக்கிறது. 5 ஆண்டுகள் என்ற காலஅளவில் இக்கூட்டாண்மையின்கீழ் சிம்ஸ் மருத்துவமனையின் முதுநிலை நிபுணர்களது வழிகாட்டலின்கீழ் மாணவர்கள் சிறப்பான பயிற்சியையும் திறன் மேம்பாட்டை பெறுவார்கள்.

 இந்நிகழ்வு குறித்து, எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி குறித்து டாக்டர் M. முருகன், துணை முதல்வர்கூறியதாவது: ‘‘கோட்பாடு சார்ந்த பாடங்களை கற்றல் மற்றும் நடைமுறை பயன்பாடு ஆகியவற்றுக்கிடையே மிகப்பெரிய இடைவெளியை எதிர்கொள்கிற சுகாதார பராமரிப்புத்துறையில், மருத்துவ மின்னணுவியல், பொறியியல் தனித்துவமான சந்தையாகவும் மற்றும் அதே வேளையில் வேகமாக விரிவடைந்துவரும் துறையாகவும் இருக்கிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இப்பிரச்சினைக்கு தீர்வுகாண எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியும், சிம்ஸ் மருத்துவமனையும் உத்தேசிக்கின்றன; மருத்துவ பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வெவ்வேறு உத்திகள், கருவித்திறன்கள் மற்றும் கருவிகளை பயன்படுத்த பல்துறை சார்ந்த சூழலில் பொறியியல் கோட்பாடுகளை ஒருங்கிணைப்பதன் மூலம் இதை சாதிப்பதே எமது நோக்கமாகும்; பயிற்சி பெற்ற தொழில்முறை நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களின் கீழ் இத்தொழில்துறை சார்ந்த அனுபவத்தை மாணவர்கள் பெறுவதற்கு இது உதவும். மேலும், சிறப்பான சிந்தனையையும், புத்தாக்கத்தையும் ஊக்குவிக்கிற ஆராய்ச்சி வாய்ப்புகளும் மாணவர்களுக்கு கிடைக்க இது வழி செய்யும்.’’

 சிம்ஸ் மருத்துவமனையின் துணைத்தலைவர் டாக்டர். ராஜு சிவசாமி இந்நிகழ்வில் பேசுகையில், ‘‘மருத்துவத்துறையில் திறன்மிக்க மருத்துவ மின்னணுவியல், பொறியியலாளர்களை உருவாக்கும் நோக்கத்தோடு எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். தற்காலத்தைச் சேர்ந்த பிரச்சினையை அறிந்திருப்பதுடன் மக்களுக்கு பொறியியல் தீர்வுகளின் முக்கியத்துவத்தை செயல்முறை மூலம் திறனுள்ளவர்களாக இப்பொறியியல் மாணவர்களை ஆக்குவதே இச்செயல்திட்டத்தின் ஒற்றை சிறப்பு நோக்கமாக இருக்கிறது. இத்துறைக்கு மதிப்பை ஏற்கக்கூடிய திறமையான தொழில்முறை நிபுணர்களை இந்த ஒத்துழைப்பு செயல்பாடு நமது நாட்டுக்கு வழங்கும் என்று நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம்,’’ என்று கூறினார்.

 2019-ஆம் ஆண்டில் இளங்கலை பட்டப்படிப்பாக பி.இ, மருத்துவ பொறியியல் தொடங்கப்பட்டது; மருத்துவ மின்னணுவியல் தளத்தில் இளங்கலை பொறியியல் மாணவர்களுக்கு தரமான கல்வியை பயிற்றுவிக்க இத்துறை திறம்பட இயங்கி வருகிறது. இன்ஸ்ட்ரூமென்ட்டேஷன், பயோ மெடிக்கல் இன்ஜினியரிங், மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ், அப்ளைடு எலக்ட்ரானிக் போன்ற பிரிவுகளில் சிறப்பான அனுபவமும், உயர்தகுதியும் கொண்ட ஆசிரியர்கள் இத்துறையில் பணியாற்றி வருகின்றனர். கற்பித்தல் – கற்றல் செயல்முறையிலும் மற்றும் மருத்துவ சாதனங்களில் மின்னணுவியல் துறையில் ஆராய்ச்சி நடவடிக்கைகளிலும் இத்துறையின் ஆசிரியர்கள் ஆர்வத்தோடும், உத்வேகத்தோடும் ஈடுபட்டு வருகின்றனர். மனித உடல் இயக்கவியல் செயல்பாடுகள் மீது இது கவனம் செலுத்துகிறது; மேலும் செயற்கை உடல் உறுப்புகள், மருத்துவ தகவல் அமைப்புகள், கருவியாக்கம், சிகிச்சை வழங்கல் அமைப்புகள் மற்றும் உடல்நல மேலாண்மை போன்ற நோயாளிகளுக்கான தேவைகளில் காணப்படும் மருத்துவ பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வெவ்வேறு உத்திகள், திறன்கள் மற்றும் கருவிகளை பயன்படுத்த பொறியியல் கோட்பாடுகளுடன் இதனை அது ஒருங்கிணைக்கிறது. 

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *