பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி இன்டியன் புக் ஆஃப் ரெக்காட்ஸில் இடம் பெறும் வகையில் சிலம்ப பயிற்சி

3684281a-ce78-4a60-a6eb-468dd1d38f55

சென்னை : சுதந்திர இந்தியாவின் 76 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி இன்டியன் புக் ஆஃப் ரெக்காட்ஸில் இடம் பெறும் வகையில் ஈகை ராஜ் சிலம்ப பயிற்சி பள்ளி சார்பாக மாணவ மாணவிகள் தொடர்ச்சியாக 4 மணி நேரம் மண் பானை மீது ஏறி நின்று தற்காப்பு கலையான சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்ச்சி சென்னை ஈக்காடு தாங்கல் டிபன்ஸ் காலனி ஆஃபிஸர்ஸ் கிளப் விளையாட்டுத் திடலில் நடைப்பெற்றது.இந்த சாதனை நிகழ்ச்சியில் 130 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சி ஈகைராஜ் சிலம்ப பயிற்சி பள்ளி மகா குரு என்.வெங்கையா ஈகை ராஜ் சிலம்ப பயிற்சி பள்ளி ஆசான் , மற்றும் ஓய்.ஜி.எஸ்.எஃப். ஐ அமைப்பின் மத்திய சென்னை மாவட்டத் தலைவருமான டாக்டர். ஆர் .சந்துரு D .lit , ஈகைராஜ் சிலம்பம் பயிற்சி பள்ளி துணை அமைப்பாளரும் ஒய்.ஜி.எஸ்.எஃப்.ஐ அமைப்பின் மத்திய மாவட்ட துணைச் செயலாளருமான ஆசான் டாக்டர் . ஆர் . சந்துரு ( எம் .டி சி), ஈகைராஜ் சிலம்பம் பயிற்சி பள்ளி துணை அமைப்பாளர் ஹேமமாலினி ஆகியோர் ஏற்பாட்டில் நடைப்பெற்றது.

மேலும் இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜி.வனிதா, கிண்டி உதவி ஆணையர் எஸ். சிவா, சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜி .கவிதா, கிண்டி ஜே3 சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஆர் . பிரவீன் ராஜேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்வில் பங்கு கொண்ட மாணவ மாணவிக ஒக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

About Author