பெட்ரோ,டீசல் விலையுயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய,மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோ,டீசல் விலையுயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய,மாநில அரசுகளை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை அண்ணாசாலை தாராபூர் டவர் அருகே இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100பேர் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர்.மேலும்,மத்திய மாநில அரசுகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவருவோரையும் கண்டித்து கண்டன முழக்கமிட்டனர்.பெட்ரோல் ,டீசல் விலையுயர்வு கட்டுப்படுத்த தவறிய மத்திய மோடி அரசு பதவி விலக வேண்டும், மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க தவறிய மாநில எடப்பாடி அரசும் பதவி விலக வேண்டும் என தெரிவித்தனர். 2கோடி இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதாக பொய்யான வாக்குறுதி கொடுத்த பிரதமர் மோடி தற்போது வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டார். பெட்ரோல் ,டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.தங்களின் சுயநலத்திற்காக மோடி அரசுடன் கைகோர்த்துள்ள மாநில அரசு,அவர்களுக்கு தரும் ஆதரவை விளக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.