தொழில்சார் பாதுகாப்பு ஆரோக்கியமான தென் இந்தியா,பாதுகாப்பான தென் இந்தியா 2023’ 2 நாள் கண்காட்சி

b5a75b4b-8cb5-4550-93ff-e5e7eb6b4b91

சென்னை, ஜூலை
அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் தென்னிந்தியாவின் 8வது பதிப்பு மற்றும் பாதுகாப்பான தென் இந்தியா 2023–ன் 7வது பதிப்பு கண்காட்சி சென்னை வர்த்தக மையத்தில் இன்று துவங்கியது.
இந்தியாவில் உள்ள இன்பார்மா மார்க்கெட்ஸ் ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சிகளில் தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மற்றும் மின்னணு பாதுகாப்பு மற்றும் தீ பாதுகாப்பு தொழில்கள் பற்றிய விரிவான விவரங்கள் இடம் பெற்றுள்ளது.
தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் தென்னிந்தியா கண்காட்சி துவக்க விழா தமிழ்நாடு பாதுகாப்பு நிபுணர்கள் நலச் சங்கத் துணைத் தலைவர் முரளி, கேரள மண்டல தேசிய பாதுகாப்பு கவுன்சில் கவுரவச் செயலாளர் டாக்டர் ரமேஷ், பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் சங்க கவுரவச் செயலாளர் வீரேந்திர ஜி. ஜவுஹாரி, இந்திய விமான நிலைய ஆணையம், சென்னை விமான நிலையத்தின் பொது மேலாளர் ராஜு, தொழிலாளர் கல்விக்கான மத்திய வாரியம், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், தமிழ்நாடு தொழிலாளர் ஆய்வு நிறுவனம் மற்றும் நிர்வாக உறுப்பினர், பேராசிரியர் ரமேஷ் குமார், டிஷ் தமிழ்நாடு இணை இயக்குனர் ஜெயகுமார், இன்பார்மா மார்க்கெட்ஸ் மூத்த குழும இயக்குனர் மற்றும் டிஜிட்டல் துறை தலைவர் பங்கஜ் ஜெயின் மற்றும் இந்நிறுவனத்தின் மூத்த திட்ட இயக்குனர் பிரசாந்த் ஜெயின் ஆகியோர் முன்னிலையில் இதன் துவக்க விழா நடைபெற்றது.
அதேசமயம், இந்தியாவின் கண்காணிப்பு அமைப்புகள் சந்தையானது தற்போது 2.5 பில்லியன் டாலர் தொழில்துறையாக மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் இது ஆண்டுதோறும் 25 முதல் 30 சதவீதம் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து துறைகளிலும் கண்காணிப்பு அமைப்புகளுக்கான தேவை அதிக அளவில் இருந்தாலும், இந்தியாவிலேயே தென்னிந்தியாவைப் பொறுத்தவரை சிசிடிவி கண்காணிப்புக்கான தேவை என்பது அதிக அளவில் உள்ளது. இந்திய மக்கள்தொகை மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றின் காரணமாக இந்த துறை நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. தொழில் வல்லுனர்கள் மற்றும் பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதன் மூலம், இந்த இரு கண்காட்சிகளும் தென்னிந்தியாவில் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தின் தரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன, இது இரு துறைகளிலும் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்தார்

About Author