சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சியின்12பதிப்பு100பொறியியல் கருவிகள் காட்சிப்படுத்தப்படும்

a0330ee7-7569-4194-b7f5-f368a0af4b6e

நவம்பர்.12,20.24சென்னைஇன்டர் நேஷனல் இஞ்சினியரிங் சோர்சிங் ஷோ சிறப்பம்சங்கள்

இன்டர்நேஷனல் இஞ்சினியரிங் சோர்சிங் ஷோ என்பது சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சியாகும். பத்தாண்டுகளாக நடைபெற்றுவரும் இந்தக் கண்காட்சிகளில், இதுவரை 3,400 இந்திய உற்பத்தியாளர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். 86,000க்கும் மேற்பட்ட சர்வதேச விருந்தினர்கள் பங்கேற்றுள்ளனர். இதன்மூலம், 7,000க்கு மேற்பட்ட நேரடி தொழில் தொடர்புகள் ஏற்பட்டு, தொடர்ச்சியாக சர்வதேச வர்த்தக உறவுகள் உருவாகியுள்ளன. 150க்கு மேற்பட்ட கருத்தரங்குகளில், 750க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் பங்கேற்று, பல்வேறு கருத்துகளையும் புத்தாக்க சிந்தனைகளையும் தெரிவித்துள்ளனர். 150க்கு மேற்பட்ட பொறியியல் பொருட்களின் பிரிவுகள் காட்சிப்படுத்தப்பட்டு, இந்திய உற்பத்தித் துறையின் பன்முகத் திறன் வெளிப்பட்டுள்ளது. 14 நாடுகளைச் சேர்ந்தவர்களோடு, 38 சர்வதே கொள்முதல் சந்திப்புகள் நடத்தப்பட்டதன் மூலம், சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா கொண்டிருக்கும் ஈடுபாடு வெளிப்பட்டது. இந்தக் கண்காட்சிகளில், நாடுகள் மற்றும் மாநிலங்களின் தனி அரங்குகள் அமைக்கப்பட்டதோடு, தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனங்களின் அரங்குகளும் ஒருங்கிணைந்து, கண்காட்சிகளையே மேன்மைப்படுத்தின. அரசுத் துறை, தனியார் துறையினரின் ஒருங்கிணைவை மேம்படுத்தும் விதமாக, 28 மாநில நிறுவனங்களைச் சேர்ந்தவர்களோடு 23 கொள்முதல் மேம்பாட்டுச் சந்திப்புகள் நடைபெற்றுள்ளன.

இந்திய பொறியியல் கொள்முதல் கண்காட்சி அறிமுகம்

இன்று கண்காட்சியின் அடுத்த பதிப்பை அறிமுகம் செய்வதற்காக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இ.இ.பி.சி.யின் தலைவர் திரு. அருண் கரோடியா பேசும்போது, ‘2017, 2018, 2019, 2020, 2023 மற்றும் இப்போது 2024இல் ஒரே ஆண்டில், இருமுறை ஐ.இ.எஸ்.எஸ். கண்காட்சிகள் நடைபெற்றுள்ளன. மேலும், சென்னையில் இந்த கண்காட்சி ஐந்தாவது முறையாகவும், தமிழ்நாட்டில் இதுவே ஏழாவதும் முறையாகவும் நடைபெறுகிறது. வரும் நவம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில், சென்னை டிரேட் சென்டரில் நடைபெற இருக்கும் இந்தக் கண்காட்சியானது, இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய பொறியியல் கொள்முதல் கண்காட்சி என்பதை நிரூபித்துள்ளது,’ என்றார்.

இந்திய பொறியியல் கொள்முதல் கண்காட்சியின் கருப்பொருள்

வரும் 2030க்குள் கார்பன் உமிழ்வே இல்லாத இந்தியாவை உருவாக்கும் இலக்கோடு செயல்படும் இந்திய அரசின் நோக்கத்தை ஒட்டி, #SmartSustainableEngineering என்பதை முன்னிலைப்படுத்தி, இந்த ஐ.இ.எஸ்.எஸ் 12 கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி, வர்த்தகப் பிரிவு, வர்த்தகத் துறை அமைச்சகம், கனரக தொழில்துறையின் இலச்சினை ஆதரவோடு நடைபெறுகிறது. மேலும், கூட்டாண்மை மாநிலங்களாக, இரண்டாவது முறையாக கர்நாடகமும், முதல் முறையாக மத்திய பிரதேசமும் உத்தரகண்டும் இணைந்துள்ளன. கவனம் பெறும் மாநிலங்களாக, முதன்முறையாக ஒடிஷாவும், இரண்டாவது முறையாக ஹரியாணா, குஜராத், உத்தரப்பிரதேசமும், நான்காவது முறையாக மேற்கு வங்கமும் பங்கேற்கின்றன. எஃகு அரங்கு பங்காளராக மூன்றாவது முறையாக டாடா ஸ்டீல் இருக்க, பி2பி மின்வர்த்தக பங்காளராக இரண்டாவது முறையாக எல் & டி சுபில் இருக்கிறது. அதேபோல், இரண்டாவது முறையாக சப்காண்டிராக்டிங் பங்காளராக சுப்கான் 2024 இருக்க, சர்வதே அரங்குகளின் பங்காளராக, கோல்டன் கேட் எக்ஸிபிஷன்ஸ், எம்.எஸ்.வி. ப்ர்னோ என்ற செக் குடியரசின் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் பிரிவு, எக்ஸ்போமேஃப் பிரேசில், இன்னொப்ரோம் ஆகியவை உள்ளன. மேலும் அம்பட் இண்டஸ்ட்ரீஸ் & மேனுபாக்சரிங் அசோசியேஷன் எனப்படும் ஏ.ஐ.எம்.ஏ. இணை நிறுவனமாக செயல்படவுள்ளது. இவையெல்லாம் சேர்ந்து, இது பொறியியல் துறையின் மிகவும் மதிக்கத்தக்க ஒரு கண்காட்சியாக மாறியுள்ளது என்று தெரிவித்தார், இ.இ.பி.சி. இந்தியாவின் நிர்வாக இயக்குனரும் செயலாளருமான திரு. அதிப் மித்ரா. ஆகிய கலந்து கொண்டனர்

About Author