கட்டுமான நல வாரியத் தலைவர் பொன் குமார் பிறந்தநாள் அன்னதானம் சிறப்பு வழிபாடு எஸ் எம் குமார் வேண்டுகோள்

ஜூன் 28 அன்று பிறந்தநாள் காணும் கட்டுமான நலவாரிய தலைவர். ரியல் எஸ்டேட் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர். சமூக நீதி சத்ரிய பேரவையின் தலைவர். கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் தலைவர். விவசாயிகள் தொழிலாளர் கட்சியின் தலைவருமான திரு பொன்குமார் அவர்களின் பிறந்த நாள் ஜூன் 28ஆம் தேதி தொழிலாளர்களின் பாதுகாப்பு தினமாக கொண்டாடுவது அனைவரும் அறிந்ததே…

அனைத்து தொழிலாளர்களுக்கும் அரசு பாதுகாப்பினை பெற்று தந்த பெருமைக்கு சொந்தக்காரர். இந்த வருடம் புதியதாக ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர்களுக்கு இந்த அரசிடம் இருந்து ஒரு பாதுகாப்பை பெற்று தர வேண்டும் என்பதற்காக புதிய அமைப்பான ரியல் எஸ்டேட் தொழிலாளர்கள் நல சங்கத்தினை ஆரம்பித்து இந்த அரசின் மூலமாக அவர்களை அமைப்புசாரா பட்டியலில் கொண்டு வந்து அவர்களுக்கு அரசு பாதுகாப்பை பெற்று தருவேன் என்று உறுதியேற்று.
இரவு பகல் பாராமல் மாவட்ட வாரியாக வீட்டுமனை தொழில் செய்கின்ற முதலாளிகளையும் அதனை வியாபாரம் செய்கின்ற தொழிலாளர்களையும் பத்திர எழுத்தாளர்களையும் ஒருங்கிணைத்து தொடர் கூட்டங்களை நடத்தி வந்தார். குறுகிய காலத்தில் இவர்கள் அனைவருக்கும் அரசு பாதுகாப்பை பெற்று தந்திட ஓய்வில்லாமல் உழைத்ததை நாம் அறிவோம்…

இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் ஒன்றாம் தேதி பல மாவட்டங்களில் இருந்து வருகை தந்த தொண்டர்களோடு கடலூருக்கு சென்று சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாளுக்கு பிறந்தநாள் புகழஞ்சலி செலுத்தி விட்டு மறுநாள் கடலூரில் நடைபெற இருந்த ஆயிரம் பேர் பங்கேற்கும் குடும்ப விழாவிற்கு தயாரான போது விபத்தின் மூலம் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்குப் பின் கடந்த 20 நாட்களாக வீட்டில் ஓய்வெடுக்கிறார். தலைவரைப் பார்க்க வந்தும் டாக்டர்களின் அறிவுறுத்தலால் அவரை பார்க்க முடியாமல்
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மருத்துவமனை முன்னும் இல்லத்திற்கு முன்னும் நின்று. இதயம் வலித்து. கண்கள் அழுது நின்றதை பார்த்து. செய்வதறியாமல் மனம் கனத்து நின்றோம் . அனைத்து தோழர்களுக்கும் ஒரு வேண்டுகோள் ஜூன் 28ஆம் தேதி அன்று வெளிமாவட்டங்களில் இருந்து யாரும் சென்னைக்கு வந்து தலைவரை சந்திக்க முயல வேண்டாம் அனைவரும் அந்தந்த மாவட்டங்களில் முதியோர் இல்லங்களில் அன்னதானம் கோயில்களில் சிறப்பு வழிபாடு பூஜைகள் செய்து தலைவர் விரைவில் பூரண குணமடைய வேண்டிக் கொள்ள வேண்டுமாய் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.,..

About Author