உணவு வீணாகும் கவலை இனி இல்லை.. கவனமீர்க்கும் REFCOLD இந்தியா 2023
சென்னை: REFCOLD இந்தியா 2023 ஆனது குளிர்பதனம் மற்றும் குளிர்-சங்கிலி தொழில்நுட்பங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தெற்காசியாவின் முன்னணி கண்காட்சி மற்றும் மாநாடாகும். இந்நிகழ்வானது, சென்னை வர்த்தக மையத்தில் இன்று (12-10-2023) தொடங்கியது. இந்நிகழ்ச்சியின் பிரமாண்டமான தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் ஆர். வேல்ராஜ், துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழகம், திரு. ராஜா எம் ஸ்ரீராம் தலைவர், RECFOLD சென்னை, ISHRAE இன் தேசியத் தலைவர் திரு. யோகேஷ் தக்கர், இந்தியாவின் இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் நிர்வாக இயக்குநர் திரு யோகேஷ் முத்ராஸ் மற்றும் ISHRAE அமைப்பின் அடுத்த வருடத்துக்கான தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனுப் பல்லானி உட்பட ஏராளமான பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
REFCOLD இந்தியா 2023 இன் முக்கியத்துவம் குறித்து இந்தியாவின் இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் நிர்வாக இயக்குனரான திரு.யோகேஷ் முத்ராஸ் பேசும்போது, “ REFCOLD இந்தியா ஆனது புதிய எல்லைகள் மற்றும் மதிப்புமிக்க ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளைத் திறக்கும் ஒரு மாற்றத்தக்க பயணத்தை வழங்குகிறது. அதுமட்டுமின்றி, இந்த எக்ஸ்போ ஆனது தொழில் வல்லுநர்களுடன் தொடர்பு கொள்ளவும், அதிநவீன தொழில்நுட்பங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது. அதுமட்டுமின்றி, நாடு முழுவதும் விரிவான குளிர்பதனக் கிடங்குகளை நிறுவுவதன் மூலம் குளிர்பதன மற்றும் குளிர் சங்கிலித் தொழிலை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது”என்றார்.