ஆசிய அராபிய சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் துவக்க விழா

0
WhatsApp Image 2021-02-18 at 1.39.10 PM

இந்திய,அராபிய பிராந்திய நாடுகளிடையேயான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும்
பொருட்டு,சென்னை ஹோட்டல் ரெசிடென்சி டவரில் ,சென்னை ஆசிய அராபிய சிறப்புப்
பொருளாதார மண்டலத்தின் துவக்க விழா 17.02.2021 இல் நடைபெற்றது.

இந்தத் துவக்க விழாவினை , கசகிஸ்தானின் தூதர் மாண்புமிகு .யெர்லான்அலிம்பாயெவ்
மற்றும் சென்னையிலுள்ள மலேசிய தாய்லாந்து பொதுத் தூதரகங்கள் இணைந்து துவக்கி
வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தென் மண்டல கோவா இயக்குனர்
R.L. கண்ணன்,
இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் திரு.சீனிவாசன், மலேசியா தாய்லாந்து கவுன்சில் ஜெனரல்
திரு. சரவணன் கராத்திகியன், தாய்லாந்து கவுன்சில் ஜெனரல் Nitirooge Phonepasert,
டாக்டர். M.N.Shankar எத்தியோப்பியாவிற்கான வர்த்தக கூட்டமைப்பு தலைவர்,
சரவணன், வெளிநாட்டு முதலீட்டு சபைக்கான தமிழக தலைவர்,

Dr. ஆசிப் இக்பால் , தலைவர் , இந்திய பொருளாதார வணிக நிறுவனம் .
க்ரிஸ் பால் , துணைத் தலைவர் , ஆசிய
அராபிய வர்த்தகக் கூடம் ,
இளவரசர் ஆசிப் அலி ,அறங்காவலர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டமைப்பு குறித்து கூறிய கோவா தென்மண்டல தலைவர் R.L.Kannan

“ தமிழ்நாடு கம்பெனிகளுக்கும் மிகப்பெரிய சந்தை மண்டலமான அராபிய
நிறுவனங்களுக்குமான பன்முக வர்த்தக உறவுகளை மேம்படுத்தி , மிக வலிமையான
வணிகக் கட்டுமானத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.44 நாடுகளை உள்ளடக்கிய
அண்டை மண்டலங்களின் மீது எனது கவனம் மிக அதிகமாக இருக்கும்.குறிப்பாக
வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிக அளவிலுள்ள ஏஎஸ்ஈஏஎன் மற்றும் டபிள்யூஏஎன்ஏ
ஆகியவற்றைக் குவிமையமாகக் கொண்டு வாய்ப்புகளை உள்கட்டுமான அமைப்புகளுடன்
தேடுதல்,அராபிய சிறப்புப் பொருளாதார மண்டலத் துவக்கத்தின்முதல்படியாக அமையும் “
என 75 ஆண்டுகள் பழமையான சென்னை ஜூபிடெர் ஆயில் மில்லின் நிறுவனரான
திரு.R.L.கண்ணன் கூறினார்.

இவர் தென் மண்டலம் கோவா ஆகியவற்றின் இயக்குனராக
நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான நியமனக் கடிதத்தை சென்னை வரவேற்பின்போது
கசகிஸ்தானின் தூதர் வழங்கினார்.ஆசியஅராபிய மண்டல வர்த்தக நிறுவனங்கள்
பங்கேற்ற வட்டமேசைச் சந்திப்பும்நடைபெற்றது.

இந்த நிகழ்வினை சென்னை அமைப்பினர்
ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலும் இந்த நிகழ்வில் சென்னை Dhee Engineering நிறுவனத்தின் நிறுவனர் திரு சரவணன்
வெளிநாட்டு முதலீட்டு சபையின்( foreign Council of India) தமிழக தலைவராக தேர்வு
செய்யப்பட்டார்.

இவருக்கு கஜகஸ்தான் தூதர் யெர்லான்அலிம்பாயெவ் அதற்கான கடிதத்தை
வழங்கினார்.

ஆசிய, அராபிய வர்த்தகக் கூடத்திற்கான நோக்கங்கள் கீழ்க்கண்டவாறு
திட்டமிடப்பட்டுள்ளன.

1)திரு . வாலிகஷ்வி மூலம் அராபிய திரைப்பட ஆணையம் நிறுவுதல்.இதன் மூலம்
தென்னிந்திய,பாலிவுட் படவுலக திரைப்பட தயாரித்தலுக்கான வாய்ப்புகளை
மேம்படுத்துதல்.

2)தில்லியிலுள்ள தூதரகங்களின் துணையுடன் , தொழில் முனைவோர் மற்றும் தூதரக
உதவியுடன் சென்னையில் மாதாந்திர வட்டமேசைக் கூட்டத்தை நடத்தி
அராபிய மண்டலத்தின் பல்வேறு பகுதிகளின் கவனத்தையும் ஈர்த்தல்.

3.அராபிய நாடுகளில் வர்த்தகம் செய்ய விரும்பும் இந்திய வணிக முதலீட்டாளர்களுக்காக ,தமிழ்நாடு மற்றும்
கேரளாவில் 14 வர்த்தக அலுவலகங்களை ஆசிய அராபிய வர்த்தகக் கூட்டமைப்பு
துவங்க திட்டம்

4.ஹைதராபாத் ,சென்னை மற்றும் பெங்களூருவிற்கு பெருமளவிலான
வாய்ப்புகளை ஏற்படுத்த மேற்கண்ட
அலுவலகங்கள் ,தில்லியிலுள்ள பல்வேறு
தூதரகங்களுடன் நேரடியாக இணைந்து செயல்பட ஏற்பாடு

5.அராபிய பிரந்தியத்துடனான வர்த்தகத்திற்கு ஏற்றவாறு தென்னிந்தியச் சந்தையினை
எளிமையானதாகவும் கவர்ச்சிகரமாகவும் மாற்ற சிறப்பு திட்டங்கள்.இந்திய தொழிலகங்களை
அரேபிய வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து கூட்டாகச் செயல்பட ஊக்குவிப்பு

6.தூத்துக்குடியில் 300 ஏக்கர் பரப்பளவில் அராபிய சிறப்புப் பொருளாதார மண்டலத்தை
நிறுவி அராபியக் கம்பெனிகளின் கூட்டுறவை மேம்படுத்துதல்.“பல நூறாண்டுகளாக
இந்தியாவிற்கும் கசகிஸ்தானுக்கும் உள்ள சமூகம் பண்பாடு சார்ந்த கூட்டுறவினை
நூற்றாண்டுகால வரலாற்றில் காணலாம் .

நமக்குள்ளான இந்த உறவினை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்ல விழைகிறோம்.நமது இந்தப்பன்முகக்
கூட்டுறவைமேம்படுத்துதலுக்கானஒப்பந்தத்தினைபுதுப்பித்துக்கொள்வோம்.புரட்சிகர சாதகத்
தன்மையுள்ள மண்டல பன்முகத்தன்மைகளில் உறுதியேற்போம் “ என
கசகிஸ்தானின் தூதர் டாக்டர் . எர்லான் அலிம்பயேவ் கூறினார்.

தூத்துக்குடியில் 300 ஏக்கர் பரப்பளவில் அராபிய சிறப்புப் பொருளாதார மண்டலத்தை
நிறுவுவதற்கு ஆசிய அரேபிய வர்த்தக கூட்டமைப்பிற்கு இந்திய அரசின் , சிறு குறு மற்றும்
தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக அனுமதி சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.

பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றோர் :-

கசகிஸ்தானின் இந்தியாவிற்கான தூதர் Dr. எர்லான் அலிம்பயேவ். R.L.கண்ணன் ,தென்
மண்டல மற்றும் கோவாவிற்கான தேசிய இயக்குனர் . Dr. ஆசிப் இக்பால் , தலைவர் ,
இந்திய பொருளாதார வணிக நிறுவனம் . க்ரிஸ் பால் , துணைத் தலைவர் , ஆசிய
அராபிய வர்த்தகக் கூடம் . இளவரசர் ஆசிப் அலி ,அறங்காவலர் , ஆசிய அரேபிய வர்த்தக கூடம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *