அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் 1000-க்கும் அதிகமான நோயாளிகளுக்கு பலனளிக்கும்வெற்றிகர சிகிச்சை! 

தெற்காசியாமற்றும் மத்தியகிழக்கு பிராந்தியத்தின் முதல்புரோட்டான் தெரபி மையமாக அப்போலோ புரோட்டான்கேன்சர் சென்டர் (APCC) 2019-ம் ஆண்டில்தொடங்கப்பட்டதிலிருந்தே உலகெங்கிலுமிருந்து வரும்புற்றுநோயாளிகளுக்கு உலகின் மிக நவீன, கதிரியக்கசிகிச்சையினை அணுகிப் பெறத்தக்கதாக ஆக்கியதன்வழியாக உறுதியான முன்னேற்ற நடவடிக்கையைமேற்கொண்டிருக்கிறது.  புரோட்டான் பீம் தெரபி (PBT) – ல் குறிப்பிடத்தக்க நிபுணத்துவ திறனை APCC, வலுவாக நிரூபித்திருக்கிறது.  இதன் மூலம்மிகச்சிறப்பான மருத்துவ விளைவுகள் கிடைக்கின்றனஎன்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.  APCC – ல்புரோட்டான் பீம் தெரபியின் மூலம் 1000-க்கும் அதிகமான நோயாளிகளுக்கு இதுவரை சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.  

புற்றுநோய்க்கான சிகிச்சையில் உலகெங்கிலும்நேர்மறை மாற்றத்தை முன்னெடுக்க வேண்டுமென்றகுறிக்கோளின் அடிப்படையில், புத்தாக்கமான, நவீனபுரோட்டான் தெரபி சிஸ்டம் – ன் முன்னணிதயாரிப்பாளரான ஐயன் பீம் அப்ளிகேஷன்ஸ் SA (IBA) நிறுவனத்துடன் ஒரு பிரத்யேக கூட்டுவகிப்புநடவடிக்கையை அப்போலோ புரோட்டான் கேன்சர்சென்டர் பெருமிதத்துடன் அறிவிக்கிறது.  2023 ஜுலை15 முதல், செயல்பாட்டிற்கு வரும் இந்த ஒத்துழைப்புநடவடிக்கை புற்றுநோய் சிகிச்சை துறையில் ஒருமுக்கியமான மைல்கல்லாக இருக்கும்.  உலகெங்கிலும்உள்ள புற்றுநோயியல் மருத்துவர்களுக்குதனிச்சிறப்பான புரோட்டான் பீம் தெரபி மீது பயிற்சியைவழங்க இத்துறையில் சிறந்து விளங்கும் இரு பிரபலஅமைப்புகளை ஒருங்கிணைத்திருப்பதே இதற்குகாரணம்.  

புரோட்டான் பீம் தெரபி, புற்றுநோய்களின் பல்வேறுவகைகளுக்கு அதிகம் பலனளிக்கின்ற, துல்லியமானகதிரியக்க சிகிச்சையாக உருவெடுத்திருக்கிறது.  புரோட்டான்களை பயன்படுத்துவதன் மூலம்புற்றுக்கட்டியை சுற்றியுள்ள ஆரோக்கியமானதிசுக்களுக்கு ஏற்படும் சேதத்தை பெருமளவுகுறைக்கவும் மற்றும் புற்றுநோய் கட்டிகளைதுல்லியமான இலக்காக கொண்டு கதிரியக்க சிகிச்சைவழங்கப்படுவதையும் இந்த புதுமையான சிகிச்சைசாத்தியமாக்குகிறது.  சிறப்பான பயிற்சியும், அனுபவமும்கொண்ட மருத்துவ நிபுணர்களை கொண்டிருக்கும்அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர், புற்றுநோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சைவிளைவுகளையும் மற்றும் மேம்படுத்தப்பட்ட வாழ்க்கைதரத்தையும் வழங்குவதற்கு மிக நவீனதொழில்நுட்பத்தை நேர்த்தியாக பயன்படுத்துவதில்தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.  

புற்றுநோயாளிகள் பலன் பெறுவதற்காக ஒரு மேம்பட்டபயிற்சி மற்றும் கல்வி திட்டத்தின் வழியாக புரோட்டான்தெரபியில் நிபுணத்துவத்தை மேலும் பரவலாக்குவதைநோக்கமாக கொண்டே APCC மற்றும் IBA -க்குஇடையிலான இந்த கூட்டு செயல்பாடுக்கானஒத்துழைப்பு மேற்கொள்ளப்படுகிறது.  புற்றுநோய்க்கானசிகிச்சை பராமரிப்பு மேலும் மேம்படுவதை இதுஉறுதிசெய்யும். 

மாறுபட்ட பின்புலங்களை கொண்ட புற்றுநோயியல்சிகிச்சை மருத்துவர்களின் திறனையும், நிபுணத்துவத்தையும் இன்னும் மேம்படுத்துவதற்காகவடிவமைக்கப்பட்டுள்ள பயிற்சி செயல்திட்டங்களைஅப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் நடத்தும். உலகெங்கிலும் புற்றுநோய் சிகிச்சையில் மேலும்புத்தாக்க செயல்பாட்டை முன்னெடுப்பதற்காகஒத்துழைப்பையும் மற்றும் அறிவு பரிமாற்றத்தையும்வளர்ப்பது என்ற குறிக்கோளை தங்களது ஆழமானஅறிவு மற்றும் அனுபவத்தை பகிர்வதன் மூலம் இம்மையம், செயல்படுத்தும்.  

இந்த ஒத்துழைப்பு நடவடிக்கை குறித்து IBA –ன்விற்பனை துறை இயக்குனர் திருகிளாட் டூபான்ட்பேசுகையில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அப்போலோபுரோட்டான் கேன்சர் சென்டர்தொடங்கப்பட்டதிலிருந்து பல்வேறு வகையானபுற்றுநோய் நேர்வுகளுக்கு வெற்றிகரமாகசிகிச்சையளிப்பதில் தனது நிபுணத்துவத்தைஅப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் திறம்படவெளிப்படுத்தியிருக்கிறது.  அப்போலோஹாஸ்பிட்டல்ஸ் உடன் இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில்கையொப்பமிடுவதில் IBA பெருமகிழ்ச்சி கொள்கிறது.  ஆசியாவிலும் மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் உள்ளபுரோட்டான் தெரபியை பயன்படுத்தும் மருத்துவப்பணியாளர்களுக்கு அதன்மீது உயர்தர பயிற்சி மற்றும்கல்வியை வழங்குவதில் தனது நிபுணத்துவத்தைபகிர்ந்துகொள்ள இதன்மூலம் அப்போலோஹாஸ்பிட்டல்ஸ் பொறுப்புறுதி ஏற்றிருக்கிறது.” என்றுகுறிப்பிட்டார். 

அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ்லிமிடெட் – ன் செயலாக்க துணைத்தலைவர் டாக்டர்ப்ரீத்தா ரெட்டி கூறியதாவது: “அப்போலோ புரோட்டான்கேன்சர் சென்டரில் புரோட்ன் பீம் தெரபி மீதுபயிற்சியளிப்பதற்காக ஐபிஏ உடன் எமது பிரத்யேககூட்டாண்மையை அறிவிப்பதில் நாங்கள்மகிழ்ச்சியடைகிறோம்.  உலகத்தரத்தில் புற்றுநோய்சிகிச்சையை வழங்குவது இத்துறையில் உலகளாவியமேம்பாடுகளை பேணி வளர்ப்பது என்ற இலக்குடன்செயல்படும் எமது பயணத்தில் இந்த ஒத்துழைப்புநடவடிக்கை ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கிறது.  புரோட்டான் தெரபி தீர்வுகளில் முதன்மை வகிக்கும்ஐபிஏ உடன் இணைந்து செயல்படுவதன் வழியாகஉலகெங்கிலும் உள்ள புற்றுநோயியல்மருத்துவர்களுக்கு பயிற்சியளிப்பது எமது நோக்கமாகும்;  அதுமட்டுமன்றி, அதிக பயனளிக்கும் சிகிச்சைவிருப்பத்தேர்வாக புரோட்டான் பீம் தெரபி இன்னும்பரவலாக ஏற்கப்படுவதற்கும் சிறந்த பங்களிப்பை இதுவழங்கும். புற்றுநோய் சிகிச்சை துறையின்எதிர்காலத்தை வடிவமைக்கவும் மற்றும் உலகெங்கிலும்உள்ள நோயாளிகளின் வாழ்க்கையில் நேர்மறைதாக்கத்தை ஏற்படுத்தவும் இந்த கூட்டுவகிப்புநடவடிக்கை உதவும் என்று நாங்கள் உறுதியாகநம்புகிறோம்.   

அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ்லிமிடெட் – ன் குரூப் ஆன்காலஜி  & இன்டர்நேஷனல்துறையின் தலைவர் திருதினேஷ் மாதவன்பேசுகையில், “உலகளவில் மிக நவீன புற்றுநோய்சிகிச்சைகளுள் ஒன்றான புரோட்டான் பீம் தெரபி, இந்தியாவிலும், தெற்காசியாவிலும் அப்போலோவால்முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டது.  இச்சிகிச்சையின் மூலம் 1000-க்கும் அதிகமானநோயாளிகள் பலனடைந்திருக்கும் நிலையில், உலகெங்கிலும் உள்ள இத்துறை மருத்துவர்கள், இயற்பியல் வல்லுனர்கள் மற்றும் தொழில்நுட்பநிபுணர்களுக்கு பயிற்சியளிக்க இப்போது நாங்கள்தயார் நிலையில் இருக்கிறோம்.  புரோட்டான் பீம்தெரபியை பெறுவதற்கான அணுகுவசதியை இதுஉறுதிசெய்யும்.  இந்தியாவில் குணம் பெறுங்கள் மற்றும்இந்தியாவால் குணமடையுங்கள் என்ற செயல்திட்டத்தைநாங்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறோம்.” என்று கூறினார். 

புரோட்டான் பீம் தெரபி பயிற்சிக்காக வளர்ந்து வரும்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஆசியா மற்றும்உலகின் பிற பகுதிகளைச் சேர்ந்த புற்றுநோயியல்மருத்துவர்களின் நலனுக்காக தனது எதிர்கால விரிவாக்கதிட்டங்களையும் அப்போலோ புரோட்டான் கேன்சர்சென்டர் வகுத்திருக்கிறது.  

About Author