“Man of Tamilnadu ” போட்டி சென்னை நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி வளாகத்தில் நடைபெற்றது

a5968896-7b56-4614-828e-18aa90f51abc

தமிழ்நாடு மாடல்ஸ் அசோசியேஷன் சார்பில் “Man of Tamilnadu ” போட்டி சென்னை நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி வளாகத்தில் நடைபெற்றது

பாரம்பரிய சுற்று, பிட்னஸ் சுற்று, கார்ப்பரேட் நடை, கேள்வி பதில் என மூன்று பிரிவுகளாக நடந்த இந்த நிகழ்ச்சியில் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் 40 பேர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.

தமிழகத்தில் முதல் முறையாக இந்த பிரத்யேக நடந்த ஆடவர் அழகுப் போட்டியில் மறைந்த விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை Man of Tamilnadu CEO மற்றும் மாடல்ஸ் அசோசியேஷன் தலைவர் வினோத் ஒருங்கிணைத்தார். இதில் வெற்றி பெற்ற நஸ்ருதீன், மனோஜ் அகில், ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர்
பிலிப்பைன்ஸ், துபாய்,மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் நடக்கும் சர்வதேச ஆடவர் அழகு போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் திரு. ஏ.எம். விக்கிரமராஜா, தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் திரு.டாக்டர் எம்.செல்வராஜ், டெர்பி ஜீன்ஸ் சிஇஓ திரு. விஜய் கபூர், 2024 ருபாரு மிஸ்டர் இந்தியா திரு.முஷ்தாக், இளம் தொழில்முனைவோர் கூட்டமைப்பு, மாநில தலைவர் திரு. ஆனந்த், நடிகைகள் செல்வி.ஷகிலா, செல்வி.வர்ஷினி, திருமதி.அனுரேயா ராமன், செல்வி.வெண்மதி, நடிகர்கள் திரு.மேத்யூ வர்கீஸ், திரு.அசோக் குமார், திரு.திலீப் குமார், திரு.பிரதீப், பிஆர்ஓ திரு.சக்தி சரவணன், பிக்பாஸ் பிரபலம் நிரூப் நந்தகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

About Author