IIFA உற்சவம் 2024: டிக்கெட் வாங்க தயாராகுங்கள்!

65e103a6-6b8f-4e95-bb5d-750b6887540e

சென்னை : மாண்புமிகு ஷேக் நஹாயான் மபாரக் அல் நஹ்யான் (சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வு அமைச்சர்) அவர்களின் கெளரவமான ஆதரவின் கீழ், IIFA உத்சவம் 2024 பிரம்மாண்டமான இரண்டு நாட்களுக்கான கொண்டாட்ட  நிகழ்வாக நடைபெற இருக்கிறது.  அதிகம் எதிர்பார்க்கப்படும் IIFA உற்சவம் 2024, கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை – அபுதாபி மற்றும் அபுதாபியில் உள்ள அதிவேக இடங்கள் மற்றும் அனுபவங்களை உருவாக்கிய முன்னணி நிறுவனமான மிரல் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்படுகிறது.

2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் IIFA உற்சவம் 2024 நடைபெற இருக்கிறது. பன்முக தென்னிந்திய சினிமா நட்சத்திர பிரபலங்களை காணலாம். 

தெலுங்கு மற்றும் கன்னட திரைப்பட பிரிவுக்கான IIFA உற்சவம் 2024 இன் தொகுப்பாளர்களாக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளர்கள் யாரென்றால், தெலுங்கு சினிமாவுக்கு தொகுப்பாளராக ரானா டகுபதியும், கன்னடதிரையுரல பிரிவுக்கான தொகுப்பாளராக விஜய் ராகவேந்திரா மற்றும் அகுல் பாலாஜி இருவரும் நிகழ்ச்சியை வழங்குகின்றனர். IIFA உற்சவம் 2024 இல் ராக்ஸ்டார் டிஎஸ்பி & ரகுல் ப்ரீத் சிங்கின் அட்டகாசமான பர்ஃபார்மன்ஸூம் இடம்பெறுகிறது. 

ராணா டகுபதி கூறுகையில், “IIFA உடனான எனது பயணம் சிறப்பானது. மேலும் IIFA உற்சவம் தென்னிந்திய சினிமாவின் உண்மையான கொண்டாட்டம். நான் அதில் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், மேலும் IIFA உத்சவம் தெலுங்கு சினிமா விருதுகளை தொகுத்து வழங்குவதில் பெரும் பாக்கியமாக உணர்கிறேன். அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் நடைபெறும் இந்த மாபெரும் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வாருங்கள்.

இதுகுறித்து ராக்ஸ்டார் டிஎஸ்பி கூறியதாவது: தென்னிந்திய சினிமாவின் சாதனைகளை உலக அரங்கில் வெளிப்படுத்தி, பொழுதுபோக்கு துறையில் அதன் இருப்பையும் தாக்கத்தையும் மேலும் உறுதிப்படுத்தும் வகையில், அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் IIFA உற்சவத்தின் இரண்டு நாள் களியாட்ட நிகழ்ச்சியை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்றார். 

அபுதாபியின் குறிப்பிடத்தக்க நகரமான யாஸ் தீவில் IIFA உற்சவம் உலகளாவிய சுற்றுப்பயணத்திற்கான டிக்கெட்டுகள் மக்களுக்காக விற்பனைக்கு வந்துள்ளன. டிக்கெட்டுகளைப் பெற https://www.etihadarena.ae/en/event-booking/iifa-utsavam மற்றும் https://abu-dhabi.platinumlist.net/event-tickets/91813/iifa-utsavam-2024-at-etihad-arena-abu-dhabiக்ளிக்கவும்.

About Author