APJ அகாடமி திறப்பு விழா..

சென்னை மேற்கு மாம்பலம் திருவேங்கடம் தெருவில் APJ அகாடமி திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது இதற்கு சுப்பிரமணியன் APJ groups. டாக்டர் சாந்தி சரவணன். அரசு பொன்மொழி. ஆனந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த அகாடமியை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி அகாடமி லோகோவை அறிமுகப்படுத்தினர் அப்பொழுது அகாடமி நிறுவனர் மற்றும் இயக்குனர் தேவகி பாலாஜி மற்றும் பாலாஜி உட்பட முக்கிய பிரமுகர்கள் அகாடமி குழந்தைகள் அவர்கள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் நிறுவனர் மற்றும் இயக்குனருமான தேவகி பாலாஜி அவர்கள் அகாடமியின் சிறப்புகளை பற்றி கூறினார் அப்போது குழந்தைகள் புத்தகம் படிப்பது மட்டுமல்லாமல் மற்ற விஷயங்களிலும் ஆவலுடன் கற்றுக்கொள்ள இந்த அகாடமி பயன்பெறும்
கடந்த 9 வருடங்களாக நாங்கள் இந்த நிறுவனத்தை சிறிய அளவில் நடத்தி வந்தோம் கொரோனா காலத்துக்குப் பின்பு இப்பகுதியில் மீண்டும் துவக்கி உள்ளோம் எங்களுடைய நோக்கமே பெண்களுக்கு முன்னுரிமைத்து அவர்களை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் குறைந்தது இந்த அகாடமி மூலம் ஐந்தாயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தர வேண்டும். மேலும் இந்த அகாடமி மூலம் 5 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்தனர். எட்டு நாடுகளில் ஆன்லைன் மூலம் வகுப்பு நடைபெறுவதாகும் தெரிவித்தார் புதிய விடியலை நோக்கி இந்த அகாடமி செயல்படும் என்றும் தெரிவித்தார். மேலும் வேலைக்கு செல்லும் மகளிர்கள் தங்களுடைய குழந்தைகளை பாதுகாப்பான இடத்தில் விட்டுச் செல்லவும் எங்கள் அகாடமியில் வசதி செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்கள்
இப்பகுதி மக்களுக்கு மிகவும் இந்த அகாடமி ஆனது பயன் உள்ளதாக இருக்கும் என்று கூறினார்