ஒளி ஒலி சேவை அமைக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் – ஒளி-ஒலி தொழிலாளர் நலச்சங்கம் வேண்டுகோள்
கோயில்,திருமண நிகழ்ச்சிகளில் 50 சதவீத ஒளி ஒலி சேவை அமைக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் – ஒளி-ஒலி தொழிலாளர் நலச்சங்கம் வேண்டுகோள்
பெருநகர ஒலி ஒளி அமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் கௌரவத் தலைவர் பன்னீர்செல்வம்:
கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு கொண்டு வந்துள்ள தடுப்பு நடவடிக்கைகளை வரவேற்கின்றோம், அதே சமயத்தில் இந்தக் கட்டுப்பாட்டு விதிமுறைகளால் ஒலி ஒளி அமைப்பாளர்கள் முழுவதுமாக தங்களது வாழ்வாதாரத்தை இழக்க நேரிட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான ஒலி ஒளி அமைப்பாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே கோயில் திருவிழாக்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு 50% அரசு அனுமதித்துள்ளது .அதே போன்று அந்த நிகழ்ச்சிகளில் 50% ஒலி ஒளி அமைப்பு களும் அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கி தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என தெரிவித்தார்