ஹாக்கி போட்டியில் பங்கேற்க தமிழக ஹாக்கி அகாடமி வீராங்கனைகள் ஒடிசா செல்கின்றனர்
தேசிய அளவிலான சப் ஜூனியர் மற்றும் ஜூனியர் பெண்களுக்கான ஹாக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் வருகின்ற 17 ம் தேதி துவங்குகிறது.இதில் கொல்கத்தா,ஒடிசா,கேரளா,தமிழ்நாடு ஹாக்கி அகாடமி உள்ளிட்ட அணிகள் கலந்து கொள்ள உள்ளன.போட்டிகள் அனைத்தும் லீக் அண்ட் நாக் அவுட் முறையில் நடைபெற உள்ளது.இந்த நிலையில் போட்டியில் பங்கேற்க உள்ள வீராங்கனைகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டனர்.இதில் வீரங்கனைகளுக்கு தமிழ்நாடு ஹாக்கி அகாடமி செயலாளர் சந்தோஷ் மற்றும் தலைமை பயிற்சியாளர் ஜெய் கணேஷ் புதிய சீருடைகள் வழங்கினர்.
இது தொடர்பாக பேசிய செயலாளர் சந்தோஷ் வீரங்கனைகளை சிறப்பாக தேர்வு செய்து உள்ளோம்.சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.தமிழகத்தில் ஹாக்கி போட்டிக்கான விளையாட்டு மைதானங்களை அதிகரிக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.