பஜாஜ் பைனான்ஸ் லிமிட்டட் பெப்ருவரி 1, 2021 ஆம் தேதியிலிருந்து வைப்பு நிதி வட்டிவிகிதத்தை அதிகரிக்கிறது.

0

புனே, மகாராஷ்ட்ரா: பஜாஜ் ஃபின்சர்வின் கடன்வழங்கும் மற்றும் முதலீடு செய்யும் பிரிவான பஜாஜ் பைனான்ஸ் லிமிட்டட் (பிஎஃப்எல்) அதன் 36லிருந்து 60 மாதங்கள் வரை வைக்கப்படும் காலவரை வைய்ப்பு நிதியின் (எஃப்டி) (fixed deposit (FD) வட்டி விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது.  ரூ. 5 கோடிகளுக்கும் குறைவான வாய்ப்பு நிதிகளுக்கான இந்த அதிகரிக்கப்பட்ட பஜாஜ் பைனான்சின் வட்டிவிகிதங்கள் பெப்ருவர்1, 2020 முதல் அமலுக்கு வரும். இந்த மாற்றியமைக்கப்பட்ட வட்டி விகிதம் புதிய வைப்புத் தொகைகளுக்கும் மற்றும் புதுப்பிக்கப்படும்  முதிர்வடைந்த  வைப்புத்தொகைகளுக்கும் பொருந்தச் செய்யப்படும்.  

கூட்டுவட்டியோடு கூடிய மூத்த குடிமக்களல்லாதவர்களுக்கான எஃப்டிக்களின் பழைய மற்றும் புதிய வட்டிவிகிதங்களின் ஒரு ஒப்பீடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காலம் (மாதங்களில்) பழைய வட்டி விகிதங்கள் புதிய வட்டி விகிதங்கள் (பெப்ருவரி 01,2021 முதல்)
12-236.10%6.15%
24-356.30%6.60%
36-606.60%7.00%

மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி, 12 மாதங்களிலிருந்து 23 மாதம் வரை வைக்கப்படும் எஃப்டி தொகைகளுக்கு 5 அடிப்படை புள்ளிகள் அதிகரித்திருக்கிறது. மற்றும் 24  மாதங்களிலிருந்து 36  மாதம் வரை வைக்கப்படும் எஃப்டி தொகைகளுக்கு 30  அடிப்படை புள்ளிகள் அதிகரித்திருக்கிறது. 36  மாதங்களிலிருந்து 60  மாதகால வைப்புத்தொகைகளுக்கு  40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்திருக்கிறது.

சமீபத்திய இந்த புதிய மாறுதலுக்குப்பின் 36 மாதம் முதல் 60 மாதங்கள் வரை உள்ள வைப்பு நிதிகள் இணைய வழி முதலீட்டு வட்டிவிகித பயனாக 0.10% உடன் சேர்ந்து  மூத்த குடிமக்களல்லாதவர்களுக்கு 7% அதிக இலாபம் தரும். இதே கால அளவுகளுக்கு மூத்த குடிமக்கள் 0.25% அதிகரித்த எஃப்டி வட்டிவிகிதத்தோடு கூடிய பயன்களை அறுவடை செய்யலாம். அவை  முதலீடுகள் எந்தவகைப்பட்டவைகளாக இருந்தாலும் உறுதி செய்யப்பட 7.25% இலாபத்தைப் பெற்றுத்தரும்.  

பஜாஜ் பைனான்ஸ் லிமிட்டட் அளிக்கும் திருத்தியமைக்கப்பட்ட FD interest rates எஃப்டி வட்டிவிகிதத்தை நோக்கிய ஒரு பார்வை

பெப்ருவரி 1,2021 முதல் அமலுக்கு வரும் பஜாஜ் பைனான்ஸ்ஸின் மூத்த குடிமக்களல்லாதோருக்கான வைப்புநிதி வட்டிவிகிதங்கள்,

Tenor (months)CumulativeNon-Cumulative
MonthlyQuarterlyHalf YearlyAnnual
12 – 236.15%5.98%6.01%6.06%6.15%
24 – 356.60%6.41%6.44%6.49%6.60%
36 – 607.00%6.79%6.82%6.88%7.00%

வட்டிவிகித பயன்கள் அடிப்படையில் வாடிக்கையாளர்களின் பிரிவு (பெப்ருவரி1, 2021 முதல்):

+0.25% மூத்த குடிமக்களுக்கு

+0.10% பஜாஜ் ஃபின்சர்வ் வலைத்தளம் அல்லது செயலி மூலமாக நேரடியாக எஃப்டிக்கு பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்காக.

குறிப்பு: Bajaj Finance online FD யில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்கள் மட்டுமே அந்த முதலீடுகள் எந்த வகைப்பட்டவைகளாக இருந்தாலும் ஒரு பயனைப் பெறுவார்கள் (0.25% வட்டிவிகித பயன்)

பஜாஜ் பைனான்ஸ் காலவரை வைப்பு நிதியில் இணையம் மூலமாக முதலீடு செய்யுங்கள்.

தொடக்கம் முதல் முடிவு வரை தாள்களை பயன்படுத்தாமல் இணையவழி நடைமுறைகளின் மூலம் முதலீட்டாளர்களை அவர்களின் வீட்டின் வசதியை பயன்படுத்திக்கொண்டே முதலீடு செய்ய உதவுவதன் மூலம் தங்கள் வீட்டிலிருந்தபடியே முதலீடு செய்யும் வசதியையும் பஜாஜ் பைனான்ஸ் வழங்குகிறது, இந்த இணையவழி எஃப்டி நடைமுறைகளின் மூலம் எஃப்டிக்கு பதிவு செய்து கொள்ள ஒரு சில நிமிடங்களே பிடிக்கும் மற்றும் முதலீட்டாளர்கள் இந்த அதிக இலாபம் தரும் எஃப்டி வட்டிவிகிதங்களை வெகு எளிதாகப் பெறமுடியும்.

பஜாஜ் பைனான்ஸ் லிமிட்டட் பற்றி

பஜாஜ் ஃபின்சர்வ் குழுமத்தின் முன்னணி நிறுவனமா பஜாஜ் பைனான்ஸ் லிமிட்டட் இந்திய என்பிஎஃப்சிக்களின் சந்தையில் மிக அதிகமாக பல்வகைப்படுத்தப்பட்ட, நாடு முழுவதும் 40 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிந்து வரும் ஒரு நிறுவனமாகும். புனேயை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், நுகர்வோர் நிலைப்பொருட்களுக்கான கடன்கள், லைஃப்ஸ்டைல் நிதி, லைஃப் கேர் நிதி, டிஜிட்டல் பொருள் கடன்கள், தனிநபர் கடன்கள், சொத்துக்கு எதிரான கடன்கள், சிறுவணிக கடன்கள், வீட்டுக் கடன்கள், கடன் அட்டைகள், இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன கடன்கள். வணிக கடன்கள் / எஸ்எம்இ கடன்கள், கடனீட்டு ஆவணங்களுக்கெதிரான கடன்கள், தங்க கடன் மற்றும் வாகன மீள் வைப்புக் கடன்கள் அத்துடன் காலவரை வைப்பு நிதிகள் உட்பட கிராமப்புற நிதியுதவி போன்றவைகளில் ஈடுபட்டுவருகிறது. பஜாஜ் பைனான்ஸ் இன்று நாட்டிலுள்ள எந்த ஒரு என்பிஎஃப்சியிலும்  கடன் மதிப்பீட்டை அதிகளவிலான எஃப்ஏஏஏ/ஸ்டேபிள் அளவில் வைத்திருப்பதை பெருமையாகக் கருதுகிறது.  

மேலும் அறிந்து கொள்ள தயவுசெய்து வருகை தாருங்கள்: https://www.bajajfinserv.in

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *