இந்தியாவின் தொழில்துறை உபகரணச் சந்தையில் புதுமையையும் ஒத்துழைப்பையும் முன்னெடுத்துச் செல்லும் IPVS & ICPE 2025 கண்காட்சிகள்

IMG_0311

இந்தியாவின் தொழில்துறை உபகரணச் சந்தையில் புதுமையையும் ஒத்துழைப்பையும் முன்னெடுத்துச் செல்லும் IPVS & ICPE 2025 கண்காட்சிகள்
~ ஆர்பிட் எக்சிபிஷன்ஸ் நிறுவனம் இக்கண்காட்சிகளை ஒருங்கிணைத்து நடத்துகிறது ~
சென்னை, நவம்பர் 13, 2025: கண்காட்சிகளை ஏற்பாடு செய்து நடத்துவதில் புகழ்பெற்ற ஆர்பிட் எக்சிபிஷன்ஸ் நிறுவனம், IPVS + ICPE 2025 என்ற இரு கண்காட்சி நிகழ்வுகளை ஒருங்கிணைத்து மிகப் பிரமாண்டமாக சென்னை மாநகரில் 2025 நவம்பர் 13 முதல் 15 வரை மூன்று நாட்கள் நிகழ்வாக சென்னை வர்த்தக மையத்தில் நடத்துகிறது. இது இண்டஸ்ட்ரியல் பம்ப்ஸ், வால்வ்ஸ் & சிஸ்டம்ஸ் (IPVS) மற்றும் இண்டஸ்ட்ரியல் கெமிக்கல் பிராசஸ் எக்யூப்மென்ட் (ICPE) ஆகிய இரண்டு உயர் சிறப்பு வாய்ந்த கண்காட்சிகள் ஒரே அமைவிடத்தில் ஒருங்கிணைந்த நிகழ்வாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடக்க விழாவில், க்ரண்ட்போஸ், ரூர்பம்பென் இந்தியா பிரைவேட் லிமிடெட் எல்&டி வால்வ்ஸ், லெஹ்ரி வால்வ்ஸ் & இன்ஸ்ட்ரூமென்டேஷன், கேஎஸ்பி லிமிடெட், கிரண் ஹைட்ராலிக் நீட்ஸ் பிரைவேட் லிமிடெட், தெர்மாக்ஸ் லிமிடெட் மற்றும் ஆண்ட்ரிட்ஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் போன்ற முன்னணி தொழில்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த கண்காட்சி நிகழ்வின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக கலந்து கொண்டனர்.
இக்கண்காட்சியானது, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள முன்னணி கண்காட்சியாளர்களை ஓரிடத்தில் ஒன்றிணைத்திருக்கிறது. தொழில்துறைக்கான பம்புகள், வால்வுகள், சாதனங்கள், குழாய்கள், மோட்டார்கள், கம்ப்ரசர்கள், சீல்கள், ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்கள், ரியாக்டர்கள், வெப்பப் பரிமாற்றிகள், அழுத்தக் கலன்கள், சேமிப்புக் தொட்டிகள் மற்றும் பிற தொடர்புடைய உபகரணங்கள் இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன. இந்த தயாரிப்பு பொருட்களில் சமீப காலத்தில் நிகழ்ந்துள்ள அதிநவீன முன்னேற்றங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
IPVS + ICPE 2025 கண்காட்சி நிகழ்வானது, திரவங்களை கையாளுதல் மற்றும் இரசாயன செயல்முறைத் தீர்வுகள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் ஒரு விரிவான B2B – தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையேயான செயல்தளமாக நடத்தப்படுகிறது. இந்நிகழ்வு, பின்வரும் தொழில்துறைகளைச் சேர்ந்த கொள்முதல் பிரிவின் உயரதிகாரிகள், ஆலோசகர்கள், திட்ட மேலாளர்கள் மற்றும் முக்கிய முடிவெடுப்பவர்கள் உட்பட, தொழில்துறையைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எண்ணெய் மற்றும் எரிவாயு | பெட்ரோகெமிக்கல்ஸ் | இரசாயனங்கள் | நீர் மற்றும் கழிவு நீர் | மின்சாரம் மற்றும் ஆற்றல் | உணவு மற்றும் பானங்கள் | மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் (பார்மாசூட்டிகல்ஸ்) | சிமெண்ட் | உற்பத்தி மற்றும் செயல்முறைத் தொழில்கள் ஆகிய தொழில்பிரிவுகளின் பிரதிநிதிகள் அதிக எண்ணிக்கையில் இக்கண்காட்சியில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஆர்பிட் எக்சிபிஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ரூபன் விகம்சே, “இண்டஸ்ட்ரியல் பம்ப்ஸ், வால்வ்ஸ் & சிஸ்டம்ஸ் (IPVS) கண்காட்சியை இண்டஸ்ட்ரியல் கெமிக்கல் பிராசஸ் எக்யூப்மென்ட் (ICPE) உடன் இணைப்பதன் மூலம், கண்காட்சியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் மேம்பட்ட மதிப்பையும், பயனையும் வழங்கும் ஒரு ஒருங்கிணைந்த தளத்தை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். இந்த ஒருங்கிணைந்த கண்காட்சியானது, இந்தியாவின் செயல்முறை (புராசஸ்) தொழிலகங்களில் தொழில்துறை நிறுவனங்களுக்கிடையே ஒத்துழைப்பு மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளையும், தொழில்நுட்பத்தையும் ஏற்று செயல்படுத்துவது மற்றும் நிலைப்புத்தன்மையுள்ள வளர்ச்சி ஆகிய நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கும் தளமாக இந்த ஒருங்கிணைக்கப்பட்ட கண்காட்சி செயல்படுகிறது,” என்றார்.
தொழில்துறையைச் சேர்ந்த கண்காட்சியாளர்கள் அவர்களது சமீபத்திய தொழில்நுட்பங்கள், நவீன தயாரிப்புகள் மற்றும் புதுமையான தீர்வுகளைக் காட்சிப்படுத்துவது இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக இருக்கும். அத்துடன், ஆட்டோமேஷன் (தானியக்க செயல்பாடு), ஆற்றல் திறன், செயல்முறையை மேம்படுத்தல் மற்றும் நிலைப்புத்தன்மையுள்ள தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தும் நோக்கத்தோடு அறிவு பகிர்வுக்கான அமர்வுகளும், தொழில்நுட்பக் கருத்தரங்குகளும் இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன. தயாரிப்புகளின் செயல்பாடு குறித்த நேரடி செய்முறை விளக்கம் மற்றும் B2B (நிறுவனங்களுக்கு இடையேயான) பிரத்யேக சந்திப்பு மற்றும் தொடர்புக்கான வாய்ப்புகள் ஆகியவை, முடிவெடுப்பவர்களுக்கும் தொழில்துறையைச் சேர்ந்த கொள்முதலாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலையும், செயல்பாட்டையும் மேலும் மேம்படுத்தும்.

About Author