வரதராஜபுரம் மற்றும் எருமையூரில் வெள்ளபாதிப்பு நிகழாமல்தடுக்க அவசர நடவடிக்கை அவசியம்
சென்னை – நவம்பர் 28, 2024: சென்னை பெருநகர மேம்பாட்டு வாரியத்தின் (CMDA) கீழ், சென்னை பெருநகரின் ஒரு அங்கமாக தாம்பரத்திலிருந்து வெறும் 3 முதல் 4 கி.மீ. தூரத்திற்குள் அமைந்துள்ள வரதராஜபுரம் மற்றும் எருமையூர் என்ற இரு கிராமங்களில் வசிக்கும் மக்கள், ஒவ்வொருஆண்டும்மழைகாலத்தின்
போதுவெள்ளபாதிப்பையும்,ஒழுங்கு
முறைப்படுத்தப்படாத நிலமேம்பாடு நடவடிக்கைகளினால் கடும்சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளுக்கு பல முறை வேண்டுகோள்களும், மனுக்களும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிற போதிலும் கூட தொடர்ந்துமோசமாகிவரும்சூழ்
நிலைக்கு நல்லதீர்வுகாணஉருப்படியான எந்த நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லைஎன்பதுவருந்தத்தக்
கது. இந்த கிராமங்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கான குடும்பங்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகஇப்பிரச்சனைகள் இருந்துவருகின்றன.பிரச்சனையின்
பின்னணிவெளிவட்டச்சாலையின் (ORR) பகுதி மற்றும் அடையாறு ஆற்றின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள இக்கிராமங்கள், குறிப்பாக, ராயப்பாநகர் இந்த பருவமழைக்காலத்தின்போது மழைவெள்ளநீரால்சூழப்பட்டு,தத்தளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நிகழ்ந்துவரும் இப்பிரச்சனை கீழ்க்கண்ட காரணங்களால் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது:
- மழை நீர் மற்றும் வெள்ள நீர் இயற்கையான முறையில் வடிந்து அடையாறு ஆற்றுக்குள் செல்வதை தடை செய்வதாக வெளிவட்டச்சாலை இருக்கிறது மற்றும் இதன் கீழ் நீர் செல்வதற்காகபோதுமானசிறுபாலங்கள் அமைக்கப்படவில்லை.
- கிஷ்கிந்தா – தாம்பரம் சாலை நெடுகிலும் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படாததால் முறையான வெளியேறல் வழி இல்லாமல் மழை நீரானது, குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து பல நாட்களுக்கு நீர் வடியாமல், வெள்ள பாதிப்பைஏற்படுத்துகிறது.இப்பிரச்
சனையை மேலும் மோசமாக்கும் வகையில், வரதராஜபுரம் மற்றும் எருமையூரின் ஒரிஜினல் குடியிருப்பு பகுதிகளையொட்டி தாழ்வான பகுதிகளில் புதிதாக 96 ஏக்கர்கள் நிலப்பரப்பில்ஒருகுடியிருப்புமனைப்
பிரிவு உருவாக்கப்பட்டு வருகிறது. தரைமட்டத்தை 7 முதல் 12 அடிவரை உயர்த்தும் அளவிற்கு மிகப் பெரிய அளவில்மண்இப்பகுதியில்கொட்டப்பட்டு வருகிறது, இயற்கையாக தண்ணீர் வடியும் வாய்க்கால்கள் பலவற்றை இந்த நடவடிக்கைமண்ணுக்குள்புதைத்திருக்
கிறது. புல எண்கள் 447, 445, 454, 444 மற்றும் பிறவற்றில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள பலசிற்றாறுகள் மற்றும் ஓடைகள் இதில் உள்ளடங்கும். இந்த தண்ணீர் வாய்க்கால்களும், ஓடைகளும் அடைக்கப்பட்டிருப்பது, இதுவரைவெள்ளபாதிப்பின்றிபாதுகாப்பாக இருந்த குடியிருப்பு பகுதிகளுக்கு மழைவெள்ளநீர்திசைதிருப்பிவிடப்படு
வதற்குவழிவகுத்திருக்கிறது.இதன்காரணமாக,மேடானபகுதிகள்கூடஇப்போதுவெள்ளத்தால்பாதிக்கப்படுபவையாக மாற்றப்பட்டிருக்கின்றன
குடியிருப்பாளர்களின் கோரிக்கைகள்
கடும் ஆபத்தையும், பெரும் சிரமத்தையும் எதிர்கொள்கின்ற வரதராஜபுரம் மற்றும் எருமையூர் கிராமங்களில் வசிக்கும் மக்கள், இப்பிரச்சனைகளுக்கு தீர்வுகாண உடனடியாகவும் மற்றும் நிரந்தர தீர்வு வழங்குமாறும் உரிய நடவடிக்கைகளை எடுக்க அரசையும், பிற அதிகார அமைப்புகளையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றனர்: