மெட்வே மருத்துவமனையின்அங்கீகாரம்46வது சான்று பெற்றஇதய நோய்க்கான சிறந்த மருத்துவமனை தேசிய அங்கீகாரம்
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள
மெட்வே மருத்துவமனையின்
அங்கீகாரம்46வது சான்று பெற்ற
இதய நோய்க்கான சிறந்த மருத்துவமனை தேசிய அங்கீகாரம் தமிழகத்தில் 4ஆம் இடம் கிடைத்துள்ளது
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையின் இயக்குனர் மருத்துவர் பழனியப்பன். முதன்மை இருதயவியல் மருத்துவர் ஜெய்சங்கர். மெட்வே மருவமனையின் தரம் முதன்மை மருத்துவர் ஏபில் ஆசீர்வாதம் ஆகியோர்கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் இதய நோய்க்கான சிகிச்சைக்காக உலகத்திலேயே பாதுகாப்பு சிகிச்சை முறை மற்றும் மருத்துவமனையின் கட்டமைப்புக்கான உலகில் சிறந்த அங்கீகரமாக கருதப்படும் அமெரிக்காவின்JCI(joint commission international) அங்கீகாரம் இப்போது வழங்கப்பட்டுள்ளது. இந்த தரசான்றுகள் மற்றும் அங்கீகாரங்கள் நோயாளிகளின் பாதுகாப்பு சிறந்த சிகிச்சை முறை மருத்துவமனையின் கடைபிடிக்கப்படும் விதிகள் அடிப்படையில் இந்த சான்று வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே 46வது சான்று பெற்ற மருத்துவமனை. தென்னிந்தியாவில் இதய நோய்க்கான சிறந்த மருத்துவமனை இது. இதய நோய்க்கான சிறந்த மருத்துவமனை தேசிய அங்கீகாரம் தமிழகத்தில் 4ஆம் இடம் கிடைத்துள்ளது என்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தமிழக அரசின் அனைத்து மருத்துவ காப்பீடுகளும் இந்த மருத்துவமனையில் ஏற்றுக்கொள்ளப்படும் அதை தொடர்ந்து அடுத்து நுரையீரலுக்கு என்று தனியாக விரைவில் மருத்துவமனை துவக்கப்படும் என்று தெரிவித்தனர் இதில் மருத்துவர்கள் மருத்துவமனை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.