சிட்டி யூனியன் வங்கியின் ஏற்பாட்டில் சென்னை போக்குவரத்து துறை அதிநவீன காவல் கண்காணிப்பு சாவடி நிறுவப்பட்டது
பெருநகர சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலை , பின்னி சாலை சந்திப்பில் சிட்டி யூனியன் வங்கியின் ஏற்பாட்டில் சென்னை போக்குவரத்து துறை அதிநவீன காவல் கண்காணிப்பு சாவடி நிறுவப்பட்டது.
இச் சாவடியை சென்னை கிழக்கு காவல் மாவட்ட சரக துணை ஆணையர் சமய் சிங் மீனா சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு திறந்து வைத்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் சி.கே.ரவி , சிட்டி யூனியன் வங்கியின் பொது மேலாளர் ஜி. சங்கரன் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்தும் , நினைவு பரிசினை வழங்கி வரவேற்றனர்.
சிட்டி யூனியன் வங்கியின் பொது மேலாளர் ஜி சங்கரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது :-
கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சிட்டி யூனியன் வங்கியின் பெருநிறுவன சமூக பொறுப்பு என்ற திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் ஆறுகள், குளங்கள், ஏரிகள் சீரமைத்தல் மருத்துவம் மற்றும் கல்விக்கான உதவிகளை வழங்குதல் போன்ற சேவையை செய்து வருகிறது .
இதன் தொடர்ச்சியாக சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் அதிநவீன போக்குவரத்து காவல்துறை கண்காணிப்பு சாவடியை சிட்டி யூனியன் வங்கியின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் பல இடங்களில் இது போன்ற கண்காணிப்பு சாவடிகள் அமைத்து தருவோம் என்றார்.