ஜனம் தமிழ் டி.வி.யின் டிஜிட்டல் ஒளிபரப்பு தொடக்கம்!
ஜனம் தமிழ் டி.வி.யின் டிஜிட்டல் ஒளிபரப்பு தொடக்கம்! தமிழக பா.ஜ.க. தலைவர் கு. அண்ணாமலை உள்ளிட்ட பிரபல அரசியல் தலைவர்கள் துவக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்பு
மலையாளத்தில்புகழ்பெற்றமுன்னணி செய்தித் தொலைக்காட்சியான ஜனம் டி.வி. (JANAM TV), தமிழில் கால் பதித்துள்ளது. இதன் தமிழ் முகமான ஜனம் தமிழ் டி.வி. டிஜிட்டல்”-இன் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் கு. அண்ணாமலை உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில், மருதம் மல்டிமீடியா நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ள “ஜனம் தமிழ் டி.வி.”யின் லோகோவை சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் சேர்ந்து அறிமுகப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து ஜனம் தமிழ் வெப்சைட்டை பா.ஜ.க. தலைவர் கு. அண்ணாமலையும், யூ-டியூபினை இந்து முன்னணியின் மாநிலத் தலைவர்காடேஸ்வராசி.சுப்பிரமணி யனும், பேஸ்புக் பக்கத்தை சக்தி மசாலா நிறுவனத்தின்அதிபர்கள் துரைசாமி – சாந்தி துரைசாமியும், இன்ஸ்டாகிராம் பக்கத்தை தமிழறிஞர் முனைவர் கு. ஞானசம்பந்தனும் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வைகைச் செல்வன், இந்து முன்னணியின் மாநிலத் தலைவர்காடேஸ்வராசிசுப்பிரமணி யன், பா.ஜ.க. சிறுபான்மையினர் அணியின் தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம், தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பி. ஆண்டாள் சொக்கலிங்கம், ஆர்.நடராஜ் ஐ.பி.எஸ்., (ஓய்வு), தமிழறிஞர்முனைவர்கு.ஞானசம் பந்தன், சக்தி மசாலா நிறுவனத்தின் அதிபர்கள் துரைசாமி, -சாந்தி துரைசாமி, பட்டிமன்றப் பேச்சாளர் மணிகண்டன்,நந்தகுமார் ஐ-ஆர்.எஸ்., திரைப்படப் பின்னணிப் பாடகர் வேல்முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக,நிகழ்ச்சியின்தொடக்கத் தில்,பத்மஸ்ரீடாக்டர்சீர்காழிசிவசிதம் பரத்தின் இறை வணக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற்றது. தொடர்ந்து, ஜனம் தமிழ் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் மது வரவேற்புரை ஆற்றினார். அடுத்ததாக, ஜனம் மலையாளம் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணகுமார் ஜனம் தொலைக்காட்சியின் வரலாறு குறித்துப் பேசினார்.
நிகழ்ச்சியின் இறுதியில், ஜனம் தமிழ் டி.வி.யின் செய்தி ஆசிரியர் திரு. மகாலிங்கம் பொன்னுச்சாமி நன்றி உரை ஆற்றினார்.