தமிழ்நாடு யோகா ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு யோகா ஆசிரியர் கூட்டமைப்பு தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு யோகா ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு யோகா ஆசிரியர் கூட்டமைப்பு தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மாநில பொதுச் செயலாளர் வே. காசிநாத துரை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்:
பள்ளி கல்லூரிகளில் யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று நாங்கள் பல காலமாக போராட்டம் நடத்தி வருகிறோம் கடந்த அதிமுக ஆட்சியில் 13,000 பேர் நியமிக்கப்படுவார்கள் என்று கூறி அதனை நிறைவேற்றவில்லை ஆகவே கடந்த சட்டமன்றத் தேர்தலில் பயிற்சி முடித்து ஆசிரியர்கள் சுமார் 2 1/2 லட்சம் பேர் திமுகவுக்கு வாக்களித்தோம் ஆனால் இதுவரை எதுவும் பணி சம்பந்தமாக முடிவெடுக்க முடியவில்லை எனவே வரும் கல்வி ஆண்டில் எங்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.வெளிநாட்டில் யோகாவிற்கு அனுமதி அளித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஏன் இந்த நிலை. மருத்துவத் துறையிலும் கோயில்களிலும் யோகாவை கற்றுத் தர வேண்டுமென்று கூறிக் கொள்கிறோம் இப்பொழுது ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறிய அளவில் எங்களை பயன்படுத்தி வருகிறார்கள் அவர்கள் எங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் அவர்களும் இதனை முடிப்பார் என்று நம்பி உள்ளோம்.யோகாவை முழுமையாக கற்றுக் கொண்டால் எந்தவித நோயும் மனிதனுக்கு வராமல் தடுக்க முடியும் என்று நாங்கள் உறுதியாக கூற முடியும் மற்ற விளையாட்டுகளுக்கு நிதி ஒதுக்கும்போது யோகா பயிற்சிக்கும் தனியாக நிதி ஒதுக்க வேண்டும் அதனால் மாணவர்களும் பொதுமக்களும் பயன் அடைவார்கள். இது சம்பந்தமாக கடந்த மூன்று நாட்களில் முன்பு விளையாட்டு துறை அமைச்சரை நேரடியாக சந்தித்து மனு அளித்துள்ளோம் அவர்களும் பரிசீலனை செய்வதாக கூறியுள்ளார் இந்த பயிற்சி முடித்துள்ள சுமார் 2.5 லட்சம் பேர் அரசின் நல்ல முடிவுக்கு காத்து உள்ளோம் என்று தெரிவித்தார்உடன் யோகா பயிற்சி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.