பிபிசியின் ஆவண படத்தை தமிழகம் முழுவதும் திரையிட்டு காட்டப்படும் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ் சி பிரிவின் தலைவர் ரஞ்சன் குமார்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே எஸ் அழகிரி பதவி ஏற்ற நான்கு ஆண்டுகள் முடிந்து 5 ஐந்தாம் ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு காங்கிரஸார் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே எஸ் அழகிரி பதவி ஏற்று நான்கு ஆண்டுகள் முடிந்து ஐந்தாம் தொடங்குவதை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ் சி பிரிவின் சார்பாக மாநிலத் தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் காங்கிரசார் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்
இதில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னத்தம்பி மாநிலச் செயலாளர்கள் ரஞ்சித் குமார், அன்பழகன், எஸ் சி துறை மாநில துணைத்தலைவர்கள் நிலவன், சுரேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் உமா பாலன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ் சி பிரிவின் மாநில தலைவர் ரஞ்சன் குமார்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்திக்கு பிறகு அதிக ஆண்டுகள் தலைவர் பதவியில் நீடிக்கும் பெருமையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி பெற்றுள்ளார்
தமிழ்நாடு காங்கிரஸ் பற்றி தலைவராக கே எஸ் அழகிரி அவர்கள் பதவி ஏற்றத்துக்கு பிறகு பாராளுமன்றத் தேர்தல் சட்டமன்றத் தேர்தல் உள்ளாட்சி தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் தொடர் வெற்றியை பெற்று தந்துள்ளார்
எந்தவித ஏற்றத்தாழ்வுகளும் இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் பதவிகளை மாநில அளவில் பெற்றுத் தந்துள்ளார்
பிபிசி நிறுவனம் வெளியிட்டுள்ள பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் ஆவண படத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ் ஏ பிரிவின் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மாவட்ட அளவிலும் வட்டார அளவிலும் திரையிட்டுக்காட்டி பிரதமர் மோடி அமித்ஷா ஆகியோரின் முகத்திரையை கிழித்தெரிய உள்ளோம்
மோடி வீட்டுக்கு ராகுல் நாட்டுக்கு என்ற முழக்கத்தோடு செயல்பட உள்ளோம்
ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ வி கே எஸ் இளங்கோவன் தன்னை எதிர்த்துப் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்க செய்து இமாலய வெற்றி பெறுவார் எனவும் தெரிவித்தார்