லாஜிஸ்டிக்ஸ்,பேக்கேஜிங்,ரோபோட்டிக்ஸ் மற்றும்போக்குவரத்துத் துறைகளின்  3 நாள் வணிகக்கண்காட்சியினை அமைச்சர் மதன் ராஜா தொடங்கி வைத்தார்

IMG-20260730-WA0514

சென்னை நந்தம்பாக்கம் வணிக மையத்தில் இந்தியாவின் கிடங்கு மேலாண்மை, லாஜிஸ்டிக்ஸ்,பேக்கேஜிங், ரோபோட்டிக்ஸ் மற்றும் போக்குவரத்துத் துறைகளின்சமீபத்தியதொழில்நுட் பங்கள் மற்றும்புதுமைகளை ஒரே இடத்தில் அறிமுகப்படுத்தும் மாபெரும் 3 நாள் வணிகக் கண்காட்சியினை  தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா தொடங்கி வைத்தார்.  தொடக்க விழா நிகழ்ச்சியில் ஃபிக்கி இணைத் தலைவர்  பூபேஷ் நாகராஜன், டான்ஸ்டியா  தலைவர் வாசுதேவன், சி.ஐ.ஏ. தலைவர் தேவகுமார், ஆந்திரா சேம்பர் ஆஃப் காமர்ஸின் துணைத் தலைவர்நரசிம்மன்மற்றும்எம்.எஸ்.எம். இ. இயக்குநர் தயாளன் உள்ளிட்ட தொழில்துறை முன்னோடிகள்  பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். கண்காட்சி குறித்து விவேகானந்தன் கூறுகையில், தென்னிந்தியாவில் தொழில்துறை கொள்முதல் மற்றும் வணிக வலையமைப்பை உருவாக்கும் முக்கிய தளமாக WAREMAT தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது என்றார்.  தொழில்நுட்ப வழங்குநர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை ஒரே தளத்தில் இணைத்து புதிய தீர்வுகளை ஆராயவும் வணிகக்கூட்டாண்மைகளைஉருவாக் கவும் வளர்ச்சிக்கானபுதியவாய்ப்புகளை அடையாளம்காணவும்உதவுவதேWAREMAT2026ன்நோக்கமாகும் என்றும்  கிடங்கு மேலாண்மை, லாஜிஸ்டிக்ஸ், தானியக்கம்மற்றும்விநியோகச்சங்கிலி (SupplyChain)தொழில்நுட்பங்களின் வளர்ச்சி, நாடு முழுவதும் உள்ள தொழில்துறைகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.  இந்த ஒருங்கிணைந்த கண்காட்சி, உற்பத்தித் துறை, ஆட்டோமொபைல், பொறியியல், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (FMCG), மருந்துத் தொழில், இ-காமர்ஸ், சில்லறை வணிகம்,உணவுப்பதப்படுத்தல்,பேக் கேஜிங், குளிர்சங்கிலி (Cold Chain), கட்டுமானம்,உள்கட்டமைப்பு,போக்குவரத்து, துறைமுகங்கள், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விநியோகச் சங்கிலி (Supply Chain)உள்ளிட்டபல்வேறுதொழில்துறை களைச் சேர்ந்த வல்லுநர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்றார் 

About Author