உணவு பழக்கவழக்கம் மற்றும் குடல் ஆரோக்கியம் குறித்து டாக்டர் வருண் குணசேகரன் எழுதிய புத்தகத்தை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார்.
கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை அரசியல் காரணத்திற்காக நிறுத்த மாட்டோம்* செயற்கையான முறையில் செரிவூட்டப்பட்ட வண்ணம் பயன்படுத்திய அப்பளம்உடல்நலத்திற்கு கேடு அதனால் அதனை தடை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்..
சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் உணவு பழக்கவழக்கம் மற்றும் குடல் ஆரோக்கியம் குறித்து டாக்டர் வருண் குணசேகரன் எழுதிய புத்தகத்தை மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அருண்ராஜ்,
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தை நாம் கடைப்பிடித்து வருகிறோம் நோய் வருவதற்கு முன்பாக எப்படி தற்காத்துக் கொள்வது என்ற முயற்சியை நாம் எடுக்க வேண்டும் ஆரோக்கியமான வாழ்வியலை நாம் பின்பற்ற வேண்டும் என்பதற்கான முயற்சியை தமிழக அரசு எடுத்து வருகிறது இந்த பட்ஜெட்டில் கூட ஆரோக்கியத்தை வளர்க்கக்கூடிய திட்டங்கள் இடம் பெற உள்ளன
முழு உடல் பரிசோதனை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது அதனை பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் இந்த பட்ஜெட்டில் அதற்கான நிதி ஒதுக்கப்படும்
நாம் எவ்வாறு ஆரோக்கியமற்ற உணவை பயன்படுத்துகிறோம் என்றால் இன்றைக்கு கூட பிளாஸ்டிக் கவருகளில் சூடான உணவுப் பொருட்களை வாங்குகிறோம்
அந்த பிளாஸ்டிக் தரமற்ற முறையில் இருக்கிறது இதெல்லாம் ஒரு ஆரோக்கியமற்ற சூழலாக இருக்கிறது நிறைய இடங்களில் டி உள்ளிட்டவைகள் பிளாஸ்டிக் கவர்களில் வாங்கி செல்லக்கூடிய நிலை இருக்கிறது இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதை அரசின் நோக்கம்
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை நிறுத்தும் எண்ணம் அல்லது விரிவாக்கம் செய்யும் எண்ணம் ஏதாவது உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அருண்
கடந்த ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை அரசியல் காரணத்திற்காக நிறுத்த மாட்டோம் அதனை எவ்வாறு மேம்படுத்துவது எப்படி செய்வது என்பது குறித்து எங்களது நோக்கம் இருக்கும்
செயற்கையான முறையில் செரிவூட்டப்பட்ட வண்ணம் பயன்படுத்திய அப்பளம் உடல் நலத்திற்கு கேடு அதனால் அதனை தடை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்..
பாராசிட்டமல் தொடர்பாக ஏற்கனவே விளக்கமாக அறிக்கை ஒன்றை துறை சார்ந்து அளித்திருப்பார்கள் குறிப்பாக 95 சதவீத ஆல்கஹால் எந்த அடிப்படையில் குவாலிட்டியாக ஆரோக்கியமானதாக உள்ளது என்பதை பரிசோதித்த பின்பு தான் அது பாதுகாப்பானது என அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்..
தனியார் கல்லூரிகளுக்கு 250 சீட் எளிதாக கிடைத்து விடுகிறது ஆனால் ஏழை எளிய மாணவர்கள் படிக்க விரும்பும் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு நூறிலிருந்து 150 இடங்கள் மட்டுமே கிடைக்கிறது இந்த ஆட்சியில் 100 முதல் 150 இடங்களை பெற்று இருக்கிறோம் தொடர்ந்து முயற்சி செய்வோம் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான நடவடிக்கைகளை நிச்சயமாக இந்த அரசு மேற்கொள்ளும் என தெரிவித்தார்
