விவசாயத்தினை பாதுகாக்க வலியுறுத்தி 9 வயது சிறுவன் வரை ஓவியம் சென்னையில் நடைபெற்றது..
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த செந்தில்குமார் காஞ்சனா தம்பதியரின் 9 வயது மகன் சுசில் இவர் தனியார் பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார்.
இவர் சமீபத்தில் குறைந்த காலகட்டத்தில் வீட்டில் இருந்த போது விவசாயிகளும் அவர்கள் துயரங்களும் இன்னல்கள் குறித்தும் வீட்டில் டிவியில் செய்தியில் கண்டுள்ளார்.
இதுகுறித்து தனது தந்தையிடம் இதற்கான காரணம் குறித்து கேட்டறிந்து உள்ளார்.
உடனே அவர் இன்றைய விவசாயிகளும் அவர்களின் நிலைமை குறித்தும் நாட்டு மக்களுக்கும் எடுத்துரைக்க விரும்பி அதற்கான ஓவியம் ஒன்றினை வரைய வேண்டுமென அவரது உள்ளத்தில் ஆவல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது தந்தையிடம் கூறி அதற்கான பயிற்சியினை மேற்கொண்டார்.
தமிழகத்தில் ஆசிரியராக வேலை பார்த்து இந்திய நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்த
டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் உருவத்தை வரைய வேண்டும் என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் தோன்றியுள்ளது.
இதற்காக தஞ்சை மாவட்டத்தில் இருந்து அவரது தந்தை மூலம் விலை நெல்களை வரவழைத்து அவருடைய உருவத்தினை 360 சதுர அடி பரப்பளவில் 200 கிலோ பாரம்பரிய நெல் வகைகளை கொண்டு வரைகலையாக இன்று வரைந்தார்.
இந்த சாதனையானது uniqlo உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.
மேலும் தமிழக கல்வி பாடத்திட்டத்தில் விவசாயம் குறித்த பாட பிரிவினையும் ஒரு பகுதியாக சேர்க்க வேண்டுமென
இந்த நிகழ்ச்சியை வடிவமைத்து அவரது பெற்றோர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.