பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு, சுமங்கலா ஸ்டீல் கல்வி உதவித்தொகைகள்

49309ad2-c090-4f6c-addd-adf71caf906c

சென்னை, பிப்ரவரி : சுமங்கலா ஸ்டீலின் “உங்கள் குழந்தையும் இன்ஜினியர் ஆகலாம்” திட்டம் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று முன்னேறி வருகிறது. அதன் மூன்றாவது பதிப்பில் 19 மாணவர்கள் பயன் பெறுகின்றனர். அவர்களின் 3/4 ஆண்டுகளுக்கான முழு கல்விக் கட்டணத்தையும் சுமங்கலா ஏற்று, படிப்பிற்கு உதவியாக லேப்டாப்களையும் வழங்குகிறது. மேலும், முதல் மற்றும் இரண்டாம் பதிப்பில் தேர்வான மாணவர்களும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.
இவ்வருடம் மொத்தமாக 53 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். மொத்த கல்வி உதவித் தொகை ரூ. 212 லட்சம் ஆகும்.
2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சுமங்கலா சமூகப் பொறுப்புணர்வு நிதி கல்வி உதவித் திட்டமான “உங்கள் குழந்தையும் இன்ஜினியர் ஆகலாம்” என்பது, தங்களது சமூகத்தின் குழந்தைகள் இன்ஜினியராக வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற உதவுவதற்கான சுமங்கலா ஸ்டீல் நிறுவனத்தின் அர்ப்பணிப்பு உணர்வுள்ள முயற்சியாகும்.
1985 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சுமங்கலா ஸ்டீல், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்டுமானத் துறைக்கு தரம், நிலைத்தன்மை மற்றும் சிறப்புடன் சேவை செய்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிக நம்பிக்கைக்குரிய மற்றும் அனுபவமிக்க இரும்புக் கம்பி உற்பத்தியாளராக விளங்கி வருகிறது.
திட்டத்தின் பின்னணி:
கட்டுமானத் துறையில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளரும் மற்றும், ஸ்டீல் டீலர்ஷிப் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும் பல ஆண்டுகளாகத் தகுதியான பொறியாளர்களின் கீழ் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்கள் குழந்தைகளும் தாங்கள் பணியாற்றிய அந்த பொறியாளர்களைப் போல உயர வேண்டும் என்று இயல்பாகவே விரும்புகின்றனர்.
இரும்புக் கம்பித்துறையில் சிறந்த புரிதலைக் கொண்ட சுமங்கலா ஸ்டீல், தொடர்ந்து உயர்தர TMT கம்பிகளை வழங்கி, கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்க்கையை எளிதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றியுள்ளது. அதற்கு பதிலாக, அந்தத்தொழிலாளர்கள் சுமங்கலாவுக்கு தங்கள் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வழங்கியுள்ளனர்.
இது தொடர்பாக, சுமங்கலா ஸ்டீலின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. ராஜேந்திரன் சபாநாயகம் அவர்கள் கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக, கட்டுமானத் தொழிலாளர்களும், டீலர்களும் எங்கள் குடும்பமாக இருந்து வருகின்றனர். சுமங்கலா கல்வி உதவித்தொகை திட்டத்தின் மூலம், அவர்களின் வாழ்க்கையில் இன்னும் பெரிய பங்காற்ற விரும்புகிறோம். அவர்களின் குழந்தைகள் இன்ஜினியர்களாகும் கனவை நிறைவேற்ற உதவுவது எங்கள் இதயபூர்வமான முயற்சியாகும்” எனவும் தெரிவித்தார்.
கல்வி உதவித் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
· கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் ஸ்டீல் டீலர்ஷிப் ஊழியர்களின் குழந்தைகள் இன்ஜினியராக உருவாக ஆதரவு.
· தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள இன்ஜினியரிங் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்குப் பொருந்தும்.
· பிளஸ் டூ தேர்வில் குறைந்தபட்சம் 70% மதிப்பெண் பெற்றவர்கள் தகுதி.
· அடிப்படை தகுதியைப் பூர்த்தி செய்தவர்கள் லக்கி டிரா மூலம் தேர்வு.
· ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சம் வரை கல்விச்செலவுகளை சுமங்கலா ஸ்டீல் ஏற்கும்.
· இன்ஜினியரிங் படிப்பைத்தொடங்கும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்.

கால அளவு:
இந்த உதவித்தொகை, மாணவர்களின் மதிப்பெண்கள், ஒழுக்கம் மற்றும் வருகை போன்ற அடிப்படை தரங்களைப்பூர்த்தி செய்வதன் அடிப்படையில் (3/4 ஆண்டுகள் ) தொடர்ந்து வழங்கப்படும்.
இந்த கல்வி உதவித் திட்டத்தை, தொடர்ந்து பல ஆண்டுகள் செயல்படுத்தி, கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் ஸ்டீல் டீலர்ஷிப் ஊழியர்களின் குழந்தைகளை ஆதரிப்பதே சுமங்கலாவின் நோக்கம்.

சுமங்கலா ஸ்டீலின் தலைவர் திரு. ராஜேந்திரன் சபாநாயகம் அவர்கள் மேலும் கூறுகையில் “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நீண்ட காலமாக இயங்கி வரும் கட்டுமான எஃகு உற்பத்தியாளர் சுமங்கலா. தமிழ்நாட்டின் கட்டிடங்களின் முதுகெலும்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கைக்கும் ஆதரவாக இருப்பதே எங்கள் நோக்கம். இன்று தேர்வு செய்யப்பட்ட 19 மாணவர்களுக்கும், அவர்களின் பெருமைமிகு பெற்றோருக்கும் இந்த இன்ஜினியரிங் கல்வி உதவித்தொகைகளை வழங்குவது எங்களுக்குப் பெருமையான நாள். அவர்களின் படிப்பு முழுவதும் நாங்கள் உறுதியாக அவர்களுடன் இருப்போம்” என கூறினார்.
பிரபல நடிகரும், கார்ப்பரேட் பயிற்சியாளருமான திரு. மோகன் ராமன் அவர்கள் சுமங்கலாவின் இந்த முயற்சியைப் பாராட்டினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “இது மிகவும் சிந்தனையுடனும், சுமங்கலா ஸ்டீலின் மிகப் பெரிய அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் செயலாகும். தமிழ்நாட்டின் கட்டுமானத் தொழிலாளர்கள் இந்த அரிய வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்,” என தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் முன்னாள் பொறியியல் தலைமை அதிகாரியும் மற்றும் பல முக்கிய கட்டிட வடிவமைப்புகளையும் கட்டுமானங்களையும் மேற்பார்வை செய்தவருமான திரு. கே.பி. சத்தியமூர்த்தி அவர்கள், இந்தத் திட்டம் பொருளாதார வசதி இல்லாத குடும்பங்களில் இருந்து புதிய இன்ஜினியர்கள் உருவாக உதவும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இது “எல்லோருக்கும் எல்லாம்” என்ற தத்துவத்தை நனவாக்கும் முயற்சி எனவும் கூறினார்.சுமங்கலாவின் தலைவர் திரு. அஷ்வின் சபாநாயகம் அவர்கள் கூறுகையில்: “நாம் ‘சுமங்கலா, தமிழ்நாட்டின் உள் சக்தி’ என்று சொல்லுவதோடு மட்டுமல்லாமல், எங்கள் இரும்புக் கம்பியிலும் எங்கள் செயல்களிலும் அதை நிரூபிக்க, தொடர்ந்து முயற்சி செய்வோம்” என கூறினார்.

About Author