சௌத் சிட்டி லயன்ஸ் கிளப்பின் 25 ஆம் ஆண்டை கொண்டாடும் விதமாக புதிய சேவை மைய துவக்க விழா

0
IMG-20210318-WA0013

சென்னை சௌத் சிட்டி லயன்ஸ் கிளப்பின் 25 ஆம் ஆண்டை கொண்டாடும் விதமாக நடுத்தர மற்றும் குடிசை வாழ் பெண்களுக்கான புதிய சேவை மைய துவக்க விழா மற்றும் பெண்கள் கருதரிப்பு பிரச்சனைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் பெரியகூடல் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் நடைபெற்றது…

இந்த சேவை மைய துவக்க விழாவில் மாவட்ட ஆளுநர் லயன்.பிரகாஷ் குமார் சிறப்பு விருந்திைராக கலந்து கொண்டு சேவா மையம் மற்றும் மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார்…

இந்த சிறப்பு மருத்துவ முகாமில் பெண்கள் கருத்தரிப்பு, சிறுநீரகம், சர்க்கரை நோய்களுக்கு தனியார் மருத்துவர்கள் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டது, மேலும் குடும்ப கட்டுபாடு செய்து கொள்வதின் அவசியம் குறித்தும், கொசோனா தொற்று பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிவது, சமூக இடைவேளி எவ்வாறு கனடபிடிப்பது குறித்து அப்பகுதி வாழ் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது…

மேலும் சேவை மையம் மூலம் பெண்களுக்கு இலவச தையற்பயிற்சி மற்றும் அப்பகுதி வாழ் ஏழை குழந்தைகளுக்கு மாலை நேர இலவச பயற்சி வகுப்புகள் அளிக்கப்படுகிறது…

மேலும் இந்த நிகழ்வில் லயன். மாணிக்கம்,அரிமா சங்கம் நிர்வாகிகள் ராஜேஷ் ஜோஷி, விஜயகுமார், அகிலன், குமார், சுஜாதா பாஸ்கரன், நிர்மலா சுப்புரமணியன், கீதா குமார், ஸ்ரீ லஷ்மி மோகன் ராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *