வாடிப்பட்டி ராஜா ஹாக்கி அகாடமி சார்பில் இந்திய அளவில் விளையாடப் போகும் அணி அறிமுகம்
வாடிப்பட்டி ராஜா ஹாக்கி அகாடமி சார்பில் இந்திய அளவில் விளையாடப் போகும் அணி அறிமுகம் மற்றும் ஜெசி அறிமுகம் நிகழ்ச்சி சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. ஹாக்கி விளையாட்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வாடிப்பட்டி ஆக்கி ராஜா அகாடமியின் ஸ்பான்ஸர் என் ஆர் எஸ் ஸ்னில்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் தியாகராஜன் மற்றும் இணை பொது மேலாளர் பட்டாபி சேதுராமன் மற்றும்
பிசியோதெரபி மருத்துவ துறை தலைவர் முத்துக்குமார் அவர்களும் வாடிப்பட்டி ராஜா ஆக்கி அகாடமியின் தலைவர் தம்பிதுரை ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் கேப்டன் ராஜா,
வாடிப்பட்டி ராஜா ஹாக்கி அகாடமி சார்பில் 100க்கும் மேற்பட்ட போட்டிகளில் எங்கள் அணி பங்கு பெற்றுள்ளது.
இதற்கு மத்திய, மாநில அரசுகள் எங்களுக்கு எந்தவித உதவியும் இதுவரை செய்ததில்லை என கூறிய அவர், கிரிக்கெட் மீது உள்ள மோகத்தால் தேசிய விளையாட்டான ஹாக்கி விளையாட்டு வளர்ச்சி அடைய வில்லை என வேதனை தெரிவித்தார் .. மேலும் தங்கள் அணிக்கு யார் வேண்டுமானாலும் உதவி செய்து இந்திய அளவு போட்டிகளில் சாதிக்க உதவிபுரிய வேண்டும் எனவும், தமிழகத்தில் இருந்து எங்கள் அணிக்கு முன்னுரிமை தர முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
பேட்டி: ராஜா, ஹாக்கி விளையாட்டின் முன்னாள் இந்திய அணி கேப்டன்….