9 வயதான ஹயன் அப்துல்லா ஒரு மணி நேரத்தில் 172 வகையான உணவுகள் சமைத்து ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்

0

சென்னையை சேர்ந்த ஹயன் அப்துல்லா(9 வயது) சேத்துபட்டுவில் உள்ள ஷெர்வுட் ஹால் பள்ளியில் மூன்றாம் நிலை வகுப்பில் படித்து வருகிறார்.

தன்னுடைய 3 n ½ வயதில் அவர் வீட்டை சுத்தம் செய்வதில் மகிழ்ந்தார்.படிப்படியாக அவரது தாயார் திருமதி. ராஷா
அவரைக் கவனித்து, சமையலில் ஆர்வம், இருப்பதை கண்டுகொண்டு பல வகையான உணவு செய்ய கற்று கொடுத்தார்.

உணவு கலையில் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த ஹயன் அப்துல்லா தன்னுடைய மந்திர கைகளால், பல்வேறு, உணவுகளை சமைக்க தொடர்ந்து ஈடுபாடு காட்டிக்கொண்டு வந்தார்.

கொரோனோ காலத்தில் , ஊரடங்கு காரணமாக கேரளாவில் இருந்தாலும், தனது தாயிடமிருந்து சமையல் கலையை கற்று, ஓய்வு நேரத்தை உலக சாதனையாக மாற்றியிருக்கிறார்.

ஹயன் அப்துல்லா ஒரு மணி நேரத்தில் 172 வகையான உணவுகள் சமைத்த சாதனையை ஏற்றுக்கொண்ட ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும்,
இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அவரது சாதனையை அங்கீகரித்துள்ளது

சமீபத்தில் அவர் ஒரு மலையாள “ராமதன் கரீம்” என்ற குறும்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்த சாதனை குறித்து, ஷெரீஃப்பா (knowledge engineering) பேசும்பொழுது, நாங்கள் குழந்தைகள் ஆர்வத்தை பகுப்பாய்வு செய்து, அவர்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்து வருகிறோம், இன்று,
ஹயன் அப்துல்லா செய்தது சாதாரண சாதனை அல்ல. ஒரு மணி நேரத்தில் 172 வகையான உணவுகள் வைப்பது அவ்வளவு எளிதல்ல. அதுவும் இந்த சிறுவன் மிகச் சிறப்பாக இந்த சாதனையை படைத்துள்ளார். எனவே ,ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும்,
இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அவரது சாதனையை அங்கீகரித்துள்ளது என்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *