ஆசிரியர்களுக்கு பணி வழங்க கோரி கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம்
2018-2019ஆண்டு முதுகலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வழங்க கோரி சென்னையில் கவன ஈர்ப்பு அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைப்பெற்றுவருகிறது.
சென்னை சிந்தாரிப்பேட்டையில் 2018-2019ஆண்டு முதுகலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தமுதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒரு நாள் கவன ஈர்ப்பு அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைப்பெற்றது.
300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்குபெற்றனர். தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் இளமாறன் பேசுகையில் 2144 முதுகல ஆசிரியர்கள் காலிபணியிடங்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பிறகும் இன்று வரை பணி வழங்கப்படமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் விதமாக ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஒரு வருட காலம் ஆகியும் இதுவரை பணி வழங்கவில்லை.
கடந்த ஒன்றாம் தேதி 22 ஆயிரத்து 98 ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
2018-2019 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு காத்துக்கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்பிய பிறகே புதிய காலி பணியிடங்களுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.